தென்காசி மாவட்ட மக்களே நோட் திஸ்.. நாளை மறுநாள் மின் தடை.. முழு விவரம் இதோ!
Tenkasi District Power Cut : தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் அக்டோபர் 17 இல் மின் தடை செய்யப்படுவதாக மின் துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதில், எந்தெந்த பகுதிகளில் மின் தடை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கலிங்கப்பட்டி, மலையாங்குளம், நக்கல முத்தன்பட்டி, திருவேங்கடம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் சனிக்கிழமை ( அக்டோபர் 17- ஆம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கீழ்காணும் பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது. இதில்,
மேலும் படிக்க: நெல்லையில் கஞ்சா வழக்கில் கைதான நபர்.. கால் முறிவால் மருத்துவமனையில் சிகிச்சை.. திடீரென எடுத்து விபரீத முடிவு!
- மலையாங்குளம்.
- செவல்குளம்.
- சிதம்பராபுரம்.
- குருக்கள்பட்டி.
- மேலநீலிதநல்லூர்.
- சத்திரப்பட்டி.
- கலிங்கப்பட்டி.
- மலையடிப்பட்டி.
ஆலடிப்பட்டு முதல் மகாதேவர் பட்டி வரை
- ஆலடிப்பட்டி.
- செள்ளி குளம்.
- சுப்புலாபுரம்.
- ரெங்கசமுத்திரம்.
- பருவக்குடி.
- கரிசல்குளம்.
- உமையத்தலைவன்பட்டி.
- திருவேங்கடம்.
- மகாதேவர் பட்டி.
ஆலமநாயக்கம்பட்டி முதல் கொம்பன் குளம் வரை
- ஆலமநாயக்கம்பட்டி.
- ஆலடிப்பட்டி.
- குறிஞ்சாக்குளம்.
- மகாதேவர் பட்டி.
- ஆவுடையார்புரம்.
- வெள்ளாகுளம்.
- குண்டம்பட்டி.
- சங்குப்பட்டி.
- புதுப்பட்டி.
- கொம்பன் குளம்.
நக்கலமுத்தன்பட்டி முதல் அப்பனேரி
- நக்கலமுத்தன்பட்டி.
- இளையசரனேந்தல்.
- புளியங்குளம்.
- வெங்கடாசலபுரம்.
- ஆண்டிப்பட்டி.
- மைப்பாறை.
- அய்யனேரி.
- அப்பனேரி ஆகிய ஊர்களில் மின் தடை செய்யப்பட உள்ளது.
மின் துறை ஊழியர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு தேவை
இதன் காரணமாக பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் மின் தடைக்கு ஏற்றவாறு தங்களது பணிகளை மாற்றிக் கொள்ள வேண்டும். மின்துறை ஊழியர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!