17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்சோ!
POCSO Filed On 25 Years Old Young Man | சேலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நிலையில், அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
சேலம், ஜனவரி 17 : சேலம் (Salem) மாவட்டம், கொளத்தூர் அடுத்த காவேரிபுரம் கணவாய் காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற 25 வயது இளைஞர். இவருடைய சகோதரர் விருதுநகர் மாவட்டம், திருவல்லிபுத்தூரை சேர்ந்த பெண் ஒருவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், தனது சகோதரனின் மனைவியின் தங்கையான 11 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை ராஜா காதலித்து வந்துள்ளார்.
17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர்
ராஜா தான் காதலித்து வந்த சிறுமியை 2025 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு 17 வயது என்பதை கேட்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : யாருடன் கூட்டணி?.. ராகுல் காந்தியை சந்திக்கும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்.. இன்று இறுதி முடிவு?
மகளிர் காவல் நிலையத்து தகவல் தெரிவித்த மருத்துவர்கள்
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பள்ளி சிறுமியை திருமணம் செய்த ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : தமிழகத்தில் இருந்து இன்று விலகும் வடகிழக்கு பருவமழை.. மீண்டும் பனிமூட்டம் தொடரும் – வெதர்மேன் பிரதீப் ஜான் ரிப்போர்ட்
பெண்களுக்கு 18 வயதுக்கு கீழ் திருமணம் செய்வது குற்றம்
இந்தியாவில் ஆண் மற்றும் பெண் என இவருக்குமே திருமண வயது உள்ளது. அதாவது ஆண்கள் 21 வயதை நிறைவடைந்த பிறகும், பெண்கள் 18 வயதை நிறைவடைந்த பிறகும் மட்டுமே திருமணம் செய்துக்கொள்ள முடியும். ஒருவேளை இந்த வயது வரம்புக்கு முன்னதாக அவர்கள் திருமணம் செய்துக்கொண்டால் அவர்களை திருமணம் செய்துக்கொண்டவர்கள் மீதோ அல்லது குடும்பத்தார் மீதோ சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.