பாமகவில் தொடரும் உட்கட்சிப் பூசல்: கொறடா அருளை நீக்க அடுத்த திட்டம் இதுதான்..

PMK Internal Power Struggle: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையேயான அதிகாரப் போட்டி கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. கொறடா அருளை நீக்கி சிவக்குமாரை நியமிக்கக் கோரி அன்புமணி ஆதரவாளர்கள் மனு அளித்துள்ளனர். இந்தப் போட்டி சட்டப்பேரவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமகவில் தொடரும் உட்கட்சிப் பூசல்: கொறடா அருளை நீக்க அடுத்த திட்டம் இதுதான்..

அன்புமணி - ராமதாஸ்

Updated On: 

04 Jul 2025 14:40 PM

சென்னை ஜூலை 04: பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi) நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் (PMK Leader Anbumani) இடையே உள்ள அதிகாரப் போட்டி கட்சியில் பெரும் பிளவாக உருவெடுத்துள்ளது. தற்போதைய கொறடா எம்.எல்.ஏ. அருளை (MLA Arul) மாற்றக் கோரி, அன்புமணிக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளனர். மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமாரை புதிய கொறடாவாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பாமக உள்பகுதி பூசல் மேலும் தீவிரமாகியுள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையிலான பதவிப் போட்டி சட்டப்பேரவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றுள்ளது. கட்சி அழுத்தத்துடன் கூடிய இரு தரப்புகளும் தனித்தனியாக அதிகாரம் செலுத்த முயல்கின்றன.

கொறடா அருளை நீக்க திட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் பதவி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாமக கொறடா பொறுப்பில் உள்ள எம்.எல்.ஏ. அருளைப் பதவியில் இருந்து மாற்றக் கோரி, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டப்பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளனர்.

ராமதாஸ் – அன்புமணி மோதல்

பாமகவில், “என் 16193,16130,16011,15500மூச்சுக்காற்று அடங்கும் வரை நானே பாமவின் நிறுவனர் மற்றும் தலைவர், தனக்கே கட்சியில் முழு அதிகாரம்” என ராமதாஸ் கூறி வரும் நிலையில், அன்புமணி தன்னைத்தான் தலைவர் என அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்துள்ளார். அதேசமயம், நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி நியமன கடிதங்களை வழங்கி அன்புமணி தனது ஆதரவைப் பெருக்கி வருகிறார்.

கட்சியிலிருந்து அருள் நீக்கம்

 

நிர்வாகிகளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ்

கடந்த சில நாட்களுக்கு முன், ராமதாஸுக்குப் பக்கபலமாக இருந்த எம்.எல்.ஏ. அருளை, அன்புமணி கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். ஆனால், தன்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்றும், ராமதாஸ் மட்டுமே பாமகவின் தலைவர் என்றும் எம்.எல்.ஏ. அருள் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதேபோன்று, அன்புமணியால் யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க முடியாது என்றும், நிர்வாகிகள் நியமனம் மற்றும் நீக்கத்தில் தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கொறடா மாற்றம் கோரி மனு

இந்த உட்கட்சிப் பூசலின் தொடர்ச்சியாக, தற்போது பாமக கொறடா பொறுப்பில் இருந்து எம்.எல்.ஏ. அருளை மாற்ற வலியுறுத்தி, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளனர். பாமக எம்.எல்.ஏ.க்களான வெங்கடேசன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் இந்த மனுவை அளித்துள்ளனர்.

இந்த மனுவில், பாமக கொறடாவாக மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமாரை நியமிக்கக் கோரி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை பாமகவில் நிலவும் பிளவை மேலும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதுடன், சட்டப்பேரவையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.