திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்யும்போது வருத்தமாக இருந்தது – பிரதமர் மோடி வேதனை
Prime Minister Narendra Modi : மதுரையில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெற்றிவேல், வெற்றிவேல், வெற்றிவேல். அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். அம்மா மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்குகிறேன் இது பாண்டியநாடு வீரத்தின் நிலம் என தமிழில் பேசினார்

பிரதமர் மோடி
மதுரை, மார்ச் 1 : மதுரையில் மார்ச் 1, 2026 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கா பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்தார். பின்னர் அவர் ரூ.4,400 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெற்றிவேல், வெற்றிவேல், வெற்றிவேல். அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். அம்மா மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்குகிறேன் இது பாண்டியநாடு வீரத்தின் நிலம் என தமிழில் பேசினார்.
‘திருப்பரங்குன்றம் சென்றபோது வருத்தமாக இருந்தது’
மேலும் பேசிய அவர், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்தேன். தெய்வீகமாக இருந்தது. தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் மக்களுக்காக இறைவனிடம் வேண்டினேன். தரிசனம் செய்தபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி தற்கொலை செய்த பூரணசந்திரனை நினைத்து வருந்துகிறேன் என்றார்.
இதையும் படிக்க : அதிமுக பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. 35 முதல் 40 இடங்களை கேட்கும் பாஜக..
மோசடி செய்வதில் திமுக அமைச்சர்களிடம் போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மக்கள் என்டிஏ அரசை கொண்டு வர தீர்மானம் செய்துவிட்டனர். நாங்கள் தூய்மையான அரசை கொடுப்போம். என்னிடமும் என் தந்தையிடமும் பயமில்லை என சமீபத்தில் திமுகவில் ஒருவர் பேசினார். ஜனநாயகத்தில் யாரும் யாருக்கும் பயப்படத்தேவையில்லை. ஆகையால் அவர்கள் என்னை விமர்சிக்கவில்லை. பாராட்டுகிறார்கள் என்று தான் அர்த்தம். அறியாலேயே எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கியிருக்கிறார்கள் என்றார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி
#WATCH | Madurai, Tamil Nadu: Prime Minister Narendra Modi says, “In 2021, after 25 long years, DMK got a full majority on its own. But they didn’t deliver good governance. They looted the state, furthering dynastic politics and ignored people’s aspirations. Look at Madurai.… pic.twitter.com/NuoYlEHY5K
— ANI (@ANI) March 1, 2026
இதையும் படிக்க : திமுகவிடம் காங்கிரஸ் தொகுதிகள் பட்டியல் அளிப்பு… 3 நாள்களில் சுமூக முடிவு… கிரிஷ் சோடங்கர் தகவல்!
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. மதுரை மக்கள் எம்ஜிஆர் உடன் நின்றனர். அதனால் மதுரையை திமுகவுக்கு பிடிக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக ஊழல் செய்து, குடும்ப ஆட்சியை நடத்தி, மக்களின் நம்பிக்கையை இழந்தனர். தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி என்டிஏ ஆட்சிதான் என்றார். காங்கிரசிடம் இருந்து விடுதலை பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு காங்கிரஸை 60 ஆண்டுகளாக மாநிலத்தை விட்டு விலக்கி வைத்துள்ளது. இதனால்தான் கத்தீவை தாரை வார்த்து காங்கிரஸ் வஞ்சம் தீர்த்தது. அப்போது திமுக வாய்மூடி மௌனமாக இருந்தது என்றார்.