குப்பையால் நிறைந்த சென்னை.. 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்..
Chennai Cracker Waste: தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து சென்னையில் 2025 அக்டோபர் 20ஆம் தேதியான நேற்று மாலை வரை சுமார் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 6.89 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, அக்டோபர் 21, 2025: நாடு முழுவதும் 2025 அக்டோபர் 20ஆம் தேதியான் நேற்று தீபாவளி பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை நாளன்று காலை முதல் மாலை வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். இதன் விளைவாக சுமார் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளன்று பொதுவாக மக்கள் காலை எழுந்தவுடன் எண்ணெய் தேய்த்து குளித்து, புதிய ஆடைகளை அணிந்து, இனிப்பு மற்றும் பலகாரங்களை அயலவர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு, பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். அதேபோல், சென்னையில் நேற்று காலை முதல் இரவு வரை மழை இல்லாமல் பரவலான வானிலை நிலவியது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடினர்.
மேலும் படிக்க: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தொடங்கியது மழையின் ஆட்டம்.. பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
60 மெட்ரிக் டன் குப்பைகள்:
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து சென்னையில் 2025 அக்டோபர் 20ஆம் தேதியான நேற்று மாலை வரை சுமார் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 6.89 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..
6000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள்:
தீபாவளியை ஒட்டி சென்னை முழுவதும் பட்டாசு கழிவுகள் பெருமளவில் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றும் பணியில் சுமார் 6,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு கும்மிடிப்பூண்டி, பெருங்குடி, கொடுங்கையூர் உள்ளிட்ட குப்பை கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பட்டாசு கழிவுகளை தூய்மை பணியாளர்களிடம் தனியாக ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் காற்று மாசு:
இந்த சூழலில் தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் காலை முதல் இரவு வரை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். அந்த பட்டாசுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட புகையினால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. சென்னையில் காற்றுமாசு அளவு 500 புள்ளிகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.