டிரெண்டான கூமாப்பட்டி கிராமம்.. பிளவக்கல் அணைக்கு செல்ல தடை.. வெளியான அறிவிப்பு

koomapatti Pilavakkal Dam : விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி கிராம் அருகே உள்ள பிளவக்கல் அணைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கூமாப்பட்டி கிராமத்திற்கு அருகே பிளவக்கல் அணைக்கு பொது மக்கள் வந்து செல்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது

டிரெண்டான கூமாப்பட்டி கிராமம்.. பிளவக்கல் அணைக்கு செல்ல தடை.. வெளியான அறிவிப்பு

கூமாப்பட்டி கிராமம்

Updated On: 

28 Jun 2025 19:39 PM

 IST

விருதுநகர், ஜூன் 28 : இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி பிளவக்கல் அணைக்கு வர வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. முன்னதாக, கூமாப்பட்டிக்கு வர வேண்டும் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தி இருந்த நிலையில், தற்போது பிளவக்கல் அணைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலுட் டிரண்டிங்கில் இருப்பது கூமாப்பட்டி கிராமம். இந்த கூமாப்பட்டி கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கூமாப்படி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே பிளவக்கல், கோவிலாறு அணைகள் உள்ளன. பரந்து விரிந்த பசுமைப் புல்வெளிகள், சுற்றி இருக்கும் மலைகள் ஒட்டுமொத்த கூமாப்பட்டியை ரம்மியாக வைத்திருக்கின்றன.

கூமாப்பட்டி கிராமம்

குறிப்பாக, மலைக்காலங்களில் இந்த கிராமம் அழகாக காட்சிகளிக்கும். ஆனால், வெயில் காலங்களில் வறண்டு போகி இருக்கும். இப்படியான சூழலில், கூமாப்பட்டி கிராமம் குறித்து இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்ததில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.

கூமாப்பட்டி வாங்க என்று அழைக்கும் வீடியோ தான் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் மன அழுத்தமா? விடுமுறை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டி வாங்க. தனித்தீவு போல இருக்கிறது என தெரிவித்திருந்தார். அதோடு, கூமாப்பட்டி கிராமத்தின் அழகையும் அவர் காண்பித்தார்.

கூமாப்பட்டி கிராமம் ரீல்ஸ்

படையெடுக்கும் மக்கள்

இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதனை அடுத்து, கூமாப்பட்டி எங்கு இருக்கு. எப்படி போவது என பலரும் கூகுளில் தேட ஆரம்பித்தனர். பொது மக்கள் பலரும் பச்சை பசேலன வயல்வெளிகள் நிறைந்திருக்கும் அந்த கிராமத்தை பார்க்க வர தொடங்கி உள்ளதாக தெரிகிறது.  ஆனால், வீடியோக்களில் பார்ப்பது போன்று நேரில் இல்லை எனவும் நெட்டிசன்கள் பலரும் போட்டோ பதிவிட்டு புலம்பி வருகின்றனர்.

மழைக்காலங்களில் மட்டுமே கூமாப்பட்டி கிராமம் ரம்மியமாக இருக்கும். வீடியோவை பார்த்து மக்கள் சென்று ஏமாற்றம் அடைந்தனர். இதனால், பொதுப்பணித்துறையும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி, கூமாப்பட்டி யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறது. இந்த சூழலில், மீண்டும் ஒரு அறிவிப்ப பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அறிவிப்பு

அதன்படி, “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி யாரும் கூமாப்பட்டிக்கு அருகே உள்ள பிளவக்கல் அணைக்கு வர வேண்டாம். தடையை மீறி யாரும் நுழைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பிளவக்கல் அணைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் தடை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.  சில நாட்களாக கூமாப்பட்டி கிராமத்திற்கு அருகே பிளவக்கல் அணைக்கு பொது மக்கள் வந்து செல்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!
ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!
கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி.. திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!
சிலிண்டர் தட்டுப்பாடு.. விண்ணை முட்டும் உணவு பொருள்கள் விலை.. தொழிலாளர்கள் கடும் வேதனை!
துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்