SIR எதிர்ப்பு திமுகவின் திசை​திருப்பு நாடகமே.. நயினார் நாகேந்திரன் சாடல்!!

Nainar nagendran critic Dmk: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுகவுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தை பல்வேறு கட்சிகள் புறக்கணித்ததையும் சுட்டிகாட்டி அவர் திமுகவின் நாடகம் என்று கூறியுள்ளார்.

SIR எதிர்ப்பு திமுகவின் திசை​திருப்பு நாடகமே.. நயினார் நாகேந்திரன் சாடல்!!

நயினார் நாகேந்திரன்

Updated On: 

03 Nov 2025 07:40 AM

 IST

சென்னை, நவம்பர் 03: தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision) கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக பாஜக (BJP) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அதோடு, ஜனநாயகத்​தின் மீதுசிறிதும் அக்​கறை இருந்​தால், முறை​யாக வாக்​காளர் பட்டியல் திருத்​தத்தை எதிர்ப்​ப​தை​விடுத்​து, எஞ்​சி​யிருக்​கும் நாட்​களில் தங்​களுக்கு வாக்​களித்த மக்​களின் குறை​களைத் தீர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டும், தவெக, நாதக, அமமுக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணித்தன. அதேசமயம், முதல்வர் தலைமையில் நடந்த அக்கூட்டத்தில் SIR-க்கு எதிராக பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: வாக்காளர் சிறப்பு திருத்தம்.. தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்..

அதில், முக்கியமானதாக எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்து கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை வெளிப்படையாக கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்பு, SIR நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

திமுகவை சாடிய நயினார் நாகேந்திரன்:

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மக்​கள் குறை​களைத் தீர்க்க ஒரு​போதும் அனைத்​துக் கட்சிக் ​கூட்​டத்தைக் கூட்​டாத முதல்​வர் ஸ்​டா​லின், தற்​போது மட்​டும் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தம் பற்​றிய கூட்​டத்தை நடத்​து​வ​தில் இருந்தே தெரி​கிறது இது மக்​களை மடை​மாற்ற நடத்​தப்​படும் மற்​றுமொரு திசை​திருப்பு நாடகம் என்​று சாடியுள்ளார்.

பல கட்சிகள் புறக்கணிப்பு:

மேலும், பல்​லாண்​டு​காலமாகத் தொடர்ந்து நடை​பெறும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்​தை, ஏதோ அந்​நிய​மானது போல, பிர​தான​மாகக் காட்​சிப்படுத்​தி, மழைவெள்ள பாதிப்​பு, ஊழல், விவ​சா​யிகள் படும் அல்​லல் ஆகிய​வற்றை மறைத்​து, குளிர்​காய முயற்​சிப்​பது இனி​யும் செல்​லாது. திமுக​வின் திசை​திருப்பும் நாடகத்தை நன்கு அறிந்​து, பல கட்​சிகள் கூட்​டத்தை புறக்​கணித்​துள்ள நிலை​யில், தோல்வி பயத்​தில் உள்ள கட்​சிகள் மட்​டுமே இக்​கூட்​டத்​தில் கலந்து கொண்​டுள்​ளன என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: கரையானை போல் இபிஎஸ் அதிமுகவை அரித்துக்கொண்டிருக்கிறார்: சேகர் பாபு விளாசல்!

திமுகவின் திசை​திருப்பு நாடகம்:

அதோடு, திமுக அரசின் தொடர் திசை​திருப்பு நாடகத்​தை​யும் வெற்று விளம்​பரத்​தை​யும் பார்த்​துப் பார்த்து சலித்​துப்​போன தமிழக மக்​கள், இந்த வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்த எதிர்ப்பு நாடகத்​தை​யும் புறக்​கணிப்​பர். ஜனநாயகத்​தின் மீதுசிறிதும் அக்​கறை இருந்​தால், முறை​யாக வாக்​காளர் பட்டியல் திருத்​தத்தை எதிர்ப்​ப​தை​விடுத்​து, எஞ்​சி​யிருக்​கும் நாட்​களில் தங்​களுக்கு வாக்​களித்த மக்​களின் குறை​களைத் தீர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்.. தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..
மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்..
விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000: உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூப்பர் அப்டேட்!!
கோவையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. பெண்கள் பாதுகாப்பை குழித்தோண்டி புதைத்த திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. முழு ரிப்போர்ட் இதோ..
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறை: நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம்!!