திருச்சி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. காரில் சென்ற முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி!

Musiri RDO Aramutha Devasena : முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, காரின் டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழுந்து எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாது.

திருச்சி நெடுஞ்சாலையில் கோர விபத்து.. காரில் சென்ற முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி!

உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர்

Updated On: 

19 Jun 2025 20:30 PM

 IST

திருச்சி, ஜூன் 19 : திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் – காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் (Trichy Accident) முசிறி வருவாய் கோட்டாட்சியர் (Musiri RDO Death) உயிரிழந்துள்ளார். திடீரென கோட்டாட்சியர் சென்ற காரின் டயர் வெடித்ததை அடுத்து, காரை திருப்பியபோது அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆரமுதா தேவசேனா (55). ஆரமுதா தேவசோன முசிறி வருவாய் கோட்டாட்சியராக (Musiri RDO Aramudha Devasena)  ஒரு வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், திருச்ச மாவட்ட ஆட்சியிர் அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதறக்காக 2025 ஜூன் 19ஆம் தேதியான இன்று காரில் வருவாய் கோட்டாட்சியர் ஆரமுதா தேவசேனா காரில் சென்றிருக்கிறார்.

கார் விபத்தில் கோட்டாட்சியர் பலி

காரை துறையூரைச் ஓட்டுநர் பிரபாகர் ஓட்டிச் சென்றிருக்கிறார்.  கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே கடியக்குறிச்சி பகுதி அருகே கார் சென்றுக் கொண்டிருந்தது.  அப்போது, காரின் வலதுபுற டயர் திடீரென வெடித்தது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், திருப்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.  பின்னர், சாலையின் இடதுபுறத்தில் இருந்து ஒரு வாகனம் மீதும் மோதி உள்ளது. இதில், வருவாய் கோட்டாட்சியர் ஆரமுதா தேவசேனா மற்றும் ஓட்டுநர் பிரபாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும், ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் கோட்டாட்சிய ஆரமுதா தேவசேனா உயிரிழந்துவிட்டாக கூறினர்.

முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு


மேலும், ஓட்டுநபர் பிரபாகரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா விபத்தில் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்துள்ளது. அதன்படி, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சமும் வழங்கப்படும் எனவும் அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டு தொகையாக ரூ.1 கோடியும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கிடையில், கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனாவின் உடலுக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என்.நேரு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Related Stories
17 ஆண்டுகளுக்கு பிறகு ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் – காஞ்சிபுரத்தில் விடுமுறை அறிவிப்பு
மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்து – 20க்கும் மேற்பட்டோர் காயம்
எப்போதும் விழிப்புடன் இருக்கக்கூடிய நகரம் மதுரை.. முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..
2026 தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும்.. சொல்கிறார் டிடிவி தினகரன்!!
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – 4 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸ் – என்ன நடந்தது?
டெல்டா, தென் தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் மழை இருக்காது – வெதர்மேன் பிரதீப் ஜான்..
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை
புதினின் மலம் சேகரிக்கும் சூட் கேஸின் ரகசியம் பற்றி தெரியுமா?
ரசகுல்லா இல்லாததால் வெடித்த கலவரம்.. இணையத்தில் வைரலாகும் காட்சிகள்..
விபத்துக்குள்ளான கார்.. 8 மணி நேரம் போராடி உயிரிழந்த தம்பதி..