Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆணழகன் பட்டம் வென்ற மீஞ்சூர் மணி 42 வயதில் உயிரிழப்பு.. என்ன காரணம்?

Minjur Mani Demise: மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் தமிழ்நாடு என பல பட்டம் வென்ற மீஞ்சூர் மணி வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், 42 வயதில் பிரபல பாடி பில்டர் மீன்சூர் மணி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணழகன் பட்டம் வென்ற மீஞ்சூர் மணி 42 வயதில் உயிரிழப்பு.. என்ன காரணம்?
மீஞ்சூர் மணி
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Jul 2025 08:24 AM

சென்னை, ஜூலை 3, 2025: மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற பிரபல பாடி பில்டர் மீஞ்சூர் மணி கடும் வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீஞ்சூர் மணி மிஸ்டர் இந்தியா மிஸ்டர் தமிழ்நாடு என எந்த போட்டியாக இருந்தாலும் கலந்து கொள்ள கூடியவர். அதேபோல் அவர் கலந்து கொண்டு பல பட்டங்களையும் வென்றுள்ளார். இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களை வென்ற மீஞ்சூர் மணி, சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் அவர் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார். அதிகாலை நேரத்தில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீஞ்சூர் மணி:

ஆனால் மேல் சிகிச்சை தேவைப்படும் என்பதன் காரணமாக அவர் மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 42 வயதில் அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இந்த சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் மணிகண்டனின் தாயார் கூறுகையில், அவர் ஆணழகன் போட்டிக்கு தயாராகும் பொழுது அதிகப்படியான ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாகவும் இதன் காரணமாக போட்டி நடைபெறும் மேடையிலேயே மயங்கு விழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகப்படியான ஊக்க மருந்து:

இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஆனால் பாடி பில்டிங் செய்யும் அளவிற்கு உடல் தேரவில்லை எனவும் அவரது தாயார் குறிப்பிட்டிருந்தா. இது போக அதிகப்படியான ஊக்க மருந்து மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்பட்டு அதற்கான மருந்துகள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் விளக்கம்:

இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவர் ஒருவர் கூறுகையில், உடற்பயிற்சி கொள்பவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காக அடிக்கடி இது போன்ற ஊக்க மருந்தை ஸ்டிராய்டு மூலம் எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பாக அனபாலிக் எனக்கூடிய மருந்தை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஊக்கு மருந்து அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படும் குறிப்பாக சிறுநீரகம் பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாடி பில்டிங் செய்யக்கூடிய நபர்கள் தங்களது உடல்நிலை சரியாக இருக்கிறதா என்பதை குறித்து அவ்வப்போது மருத்துவ பரிசோதனை ஆண்டுக்கு ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.