“எம்ஜிஆர், ஜெயலலிதாவே என் ரோல் மாடல்”.. விஜய் பரபரப்பு பேட்டி!!
தான் பேச தயங்குவதாகவும், ஒற்றை வரி பதில்களை மட்டுமே அளிப்பதாகவும் பெரும்பாலானோர் நினைப்பதாக கூறிய அவர், தான் எப்போதும் தனது உரைகள் மூலமாகப் விரிவாகப் பேசி வருவதாகவும் விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து, தான் நடிகர் ஷாருக் கானின் ரசிகர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்
சென்னை, ஜனவரி 31: எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரே அரசியலில் என் ரோல் மாடல் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வந்த விஜய், முதல்முறையாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு ஆஃப் கேமரா பேட்டி கொடுத்துள்ளார். அதன்படி, சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்போது, அவர் தனது அரசியல் திட்டங்கள், தனது சிந்தனைகள், உத்திகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?
அரசியல் தான் எதிர்காலம் என்பதில் உறுதி:
அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாகவும், அதுபோன்ற ஒன்று நடக்கும் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்காததால், அது இன்றும் தன்னை ஏதோ ஒரு வகையில் பாதிப்பதாகவும் அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து, பேசிய அவர் ஏன் இங்கு இருக்கிறேன் என்பதில் தனக்கு எந்தக் குழப்பமும் இல்லை என்றும், தான் ஒரு முடிவெடுத்து சினிமாவை விட்டுவிட்டதாகவும், அரசியல் தான் தனது எதிர்காலம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்கல் குறித்து வேதனை:
தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து பேசிய அவர், படத்தின் வெளியீட்டிற்கு அனுமதி கிடைக்காததால் பாதிக்கப்பட்டுள்ள தனது தயாரிப்பாளருக்காக வருத்தப்படுவதாக அவர் கூறினார். எனினும், தனது அரசியல் பிரவேசம் காரணமாகத் தனது திரைப்படம் குறிவைக்கப்படலாம், இது போன்ற ஒன்று நடக்கும் என்று தான் எதிர்பார்த்ததாகவும் தெரிவித்த அவர், அதற்கு அவர் மனதளவில் தயாராகவே இருந்தாகவும் எடுத்துரைத்துள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவே ரோல்மாடல்:
தான் பேச தயங்குவதாகவும், ஒற்றை வரி பதில்களை மட்டுமே அளிப்பதாகவும் பெரும்பாலானோர் நினைப்பதாக கூறிய அவர், தான் எப்போதும் தனது உரைகள் மூலமாகப் விரிவாகப் பேசி வருவதாகவும் விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து, தான் நடிகர் ஷாருக் கானின் ரசிகர் என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசியலில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தனது ரோல் மாடல்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி பெறுவேன் என்பதில் உறுதி:
மேலும், நீங்கள் கிங்மேக்கரா என்று கேள்விக்கு பதிலளித்த அவர், நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். அப்படி இருக்க ஏன் கிங்மேக்கராக இருக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, தனது பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்த்தீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த தேர்தலில் ஏதோ ஒன்றை நிரூபிப்பதற்காக களம் காணாமல், வெற்றி பெறுவதற்காகவே போட்டியிடுகிறேன் என்பதில் அவர் தெளிவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : திமுக கூட்டணியில் தேமுதிக? சஸ்பென்ஸ் வைத்த கனிமொழி.. எகிறும் எதிர்பார்ப்பு!
அரசியலில் நீண்டகால பயணம்:
அதோடு, தனது அரசியல் வருகை என்பது இந்த ஒரு தேர்தலை மட்டும் பற்றியது அல்ல என்றும், நீண்டகால பயணம் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளதாகவும் கூறியுள்ளார். பல தசாப்தங்களாக திரை நட்சத்திரமாக இருந்த தனக்கு, இந்த அரசியல் மாற்றம் எளிதானதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.