அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏவாக மக்களுக்கு திட்டங்களை அள்ளி கொடுத்தவர் – திமுக வேட்பாளரை ஆதரித்து துரை வைகோ பிரச்சாரம்..

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். ஏழை எளிய குடும்பங்களுக்கான பல தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன; அதே சமயம் தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இத்தகைய வளர்ச்சி எந்த ஆட்சியிலும் கிடைக்கவில்லை எனவும் துரை வைகோ கூறினார்.

அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏவாக மக்களுக்கு திட்டங்களை அள்ளி கொடுத்தவர் - திமுக வேட்பாளரை ஆதரித்து துரை வைகோ பிரச்சாரம்..

கோப்பு புகைப்படம்

Published: 

17 Apr 2026 15:30 PM

 IST

திருச்சி, ஏப்ரல் 17, 2026: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து மதிமுக எம்.பி. துரை வைகோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி தமிழகத்தில் தான்:

அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். ஏழை எளிய குடும்பங்களுக்கான பல தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன; அதே சமயம் தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இத்தகைய வளர்ச்சி எந்த ஆட்சியிலும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

மேலும் படிக்க: கரூரில் பரபரப்பு.. செந்தில் பாலாஜி நண்பர் வீடு – அலுவலகத்தில் திடீர் சோதனை.. அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை!

எனவே, அதற்காகவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும்,  அனைவருடனும் எளிதில் பழகக்கூடியவர் இனிகோ இருதயராஜ்; நல்ல பண்பாளர், நல்ல மனிதர் என்றும் அவர் பாராட்டினார். யார் எங்கு வசிக்கிறார்கள், எந்த தெருவில் என்ன தேவைகள் உள்ளன என்பதனை புள்ளிவிவரங்களுடன் அறிந்திருக்கும் ஒருவர் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சராக இல்லாவிட்டாலும், சட்டமன்ற உறுப்பினராக இருந்து இந்த தொகுதிக்காக பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறார். குறிப்பாக, காந்தி மார்க்கெட் அதே இடத்தில் இயங்க வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் போராடி, வியாபாரிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமையை பெற்றுத் தந்தவர் இனிகோ இருதயராஜ் என தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராகி இருக்க வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்!

அதேபோல், குடிநீர் குழாய்களை 8 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களுக்காக அமைத்து தந்துள்ளார். எனவே, பல்வேறு திட்டங்களை தொடர்ந்து இந்த தொகுதி மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் அவருக்கு ஆதரவாக நின்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Follow Us
பாடகி கேஎஸ் சித்ரா தனது மகளை பற்றி பகிர்ந்த பதிவு.. உடன் அன்பை பகிர்ந்த பாடகர்கள்..
கிணற்றுக்குள் விழுந்த சிங்கம் - 30 நிமிடங்களில் வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்பு
பெட்ரோலுக்கு ரூ.18 இழப்பு, டீசலுக்கு ரூ. 35 இழப்பு - நஷ்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள்
ஈரானுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களையும் நிறுத்தம் - அமெரிக்கா கடும் நடவடிக்கை