62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை.. முதலில் தபால் வாக்கு – தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்

தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும் என்பது குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும்.

62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை.. முதலில் தபால் வாக்கு - தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்

கோப்பு புகைப்படம்

Published: 

27 Apr 2026 21:04 PM

 IST

ஏப்ரல் 27, 2026: அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில், ஏப்ரல் 23ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும் என்பது குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும்.

மேலும் படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது.. எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்..

வாக்கு எண்ணும் வழிமுறைகள்:

  • வாக்கு எண்ணும் பணி காலை 8:00 மணிக்கு துவங்கும்.
  • முதலில் காலை 8:00 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
  • 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
  • EVM வாக்குகள் எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்த பின்பே தொடங்கப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும்:

  • ஒரு பகுதியில் தபால் வாக்குகள்,
  • மற்றொரு பகுதியில் EVM வாக்குகள், தனித்தனியாக மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ARO) மேற்பார்வை மேற்கொள்வார்.
  • 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் எண்ணிக்கை நடைபெறும்.

தபால் வாக்குகள்:

  • தேர்தல் பணியில் ஈடுபட்ட மொத்த 3.60 இலட்சம் அலுவலர்களில், 2.88 இலட்சம் (80%) பேர் தபால் வாக்குகளின் மூலம் வாக்களித்துள்ளனர்.
  • காவல்துறை அலுவலர்கள், Zonal/Sector அலுவலர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சேர்த்து மொத்தம் 3.36 இலட்சம் தேர்தல் பணியாளர்கள் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர்.
  • மேலும், 1.10 இலட்சம் அலுவலர்கள் ‘Election Duty Certificate’ மூலம் நேரடியாக வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளனர்.

சிறப்பு பிரிவுகள்:

  • 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த Form 12D விண்ணப்பங்களின் அடிப்படையில், 1.73 இலட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களித்துள்ளனர்.
  • சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 பேர் இதுவரை வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள், வாக்கு எண்ணிக்கை நாளான 04.05.2026 காலை 8:00 மணி வரை பெறப்படும்.

மேலும், வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்தவர்களுடன் கூடுதலாக 6.37 இலட்சம் வாக்காளர்களுக்கு சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இதனால், வாக்கு எண்ணிக்கை நாள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, வெளிப்படையான மற்றும் சீரான எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?