கடிக்க பாய்ந்ததால் ஆத்திரம்.. தெரு நாயை கட்டையால் அடித்து கொலை செய்த நபர்!

Man Killed Street Dog in Chennai | சென்னை மயிலாப்பூரில் மோகன் என்ற நபர் டீ கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அங்கு வந்த ஒருவரை நாய் கடிக்க முயன்ற நிலையில், அவர் கட்டையை கொண்டு தாக்கி நாயை கொலை செய்துள்ளார்.

கடிக்க பாய்ந்ததால் ஆத்திரம்.. தெரு நாயை கட்டையால் அடித்து கொலை செய்த நபர்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Nov 2025 08:15 AM

 IST

சென்னை, நவம்பர் 15 : இந்தியாவில் (India) சென்னை (Chennai) உள்ளிட்ட முக்கிய தலைநகரங்களில் தெரு நாய்களின் தொல்லை (Stray Dogs Issue) மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருகட்டமாக தெருநாய்களை முகாம்களில் அடைக்க பேச்சுவார்த்தை எழுந்தபோது, விலங்குகள் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தெருநாய்களை முகாம்களில் அடைப்பது மனிதாபிமானம் அற்ற செயல் என்று அவர்கள் கூறி வந்தனர்.

தொடர்ந்து அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை

இது ஒரு பக்கம் இருக்க தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சாலையில் விளையாடும் குழந்தைகளை கடிப்பது, முதியவர்களை கடிப்பது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிப்பது என தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், சென்னையில் ஒருவரை தெரு நாய் கடிக்க முயன்ற நிலையில், அந்த நபர் தெரு நாயை அடித்தே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க : மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. மருத்துவமனை வாசலில் நர்ஸ் படுகொலை.. கணவன் வெறிச்செயல்!

கடிக்க பாய்ந்த தெரு நாய் – அடித்தே கொலை செய்த நபர்

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் டீ கடை நடத்தி வருபவர் மோகன். 56 வயதான இவரின் கடைக்கு டீ குடிக்க வந்த ஒருவரை அங்கிருந்த தெரு நாய் ஒன்று கடிக்க பாய்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மோகன் அந்த தெரு நாயை கட்டையை கொண்டு மிக பலமாக தாக்கியுள்ளார். இதன் காரணமாக அந்த நாய் உயிரிழந்த நிலையில், அதன் உடலை அவர் அருகில் உள்ள குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார்.

இதையும் படிங்க : திருப்போரூர் அருகே வெடித்து சிதறிய பயிற்சி விமானம்… பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானிகள்

இந்த நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த டீக்கடை உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நபரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தெரு நாய்களின் பிரச்னை எவ்வளவு தீவிரமாகியுள்ளது என்பதை இதன் மூலம் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.