ரூ.30,000-க்கு பெண் சிசுக் கொலை… சிக்கிய மருத்துவர்.. திருப்பத்தூரை அதிர வைத்த சம்பவம்!
Tirupattur Crime News : திருப்பத்தூர் மாவட்டத்தில் சிசுக்களை அழைத்ததாக மருத்துவர் சுகுமார் என்பவர் கைதாகி உள்ளார். சிசுக்களின் பாலினத்தை கண்டறிவதற்காக கர்ப்பிணிகளிடம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை பெற்றதாக தெரிகிறது. மேலும், காலியாக இருக்கும் வீடுகளில் போலியாக ஸ்கேன் சென்டர் அமைத்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான மருத்துவர்
திருப்பத்தூர், ஆகஸ்ட் 22 : திருப்பத்தூர் மாவட்டத்தில் பணத்திற்காக பெண் சிசுக்களை அழைத்ததாக மருத்துவர் சுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத ஸ்கேன் சென்டர் நடத்தி வந்த ஐந்து புரோக்கர்களை ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மருத்துவர் கைதாகி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தருமபுரி, கிருஷ்ணகிரி இருந்து 8 கர்ப்பிணிகள் திருப்பத்தூர் மாவட்டம் பகுதிக்கு ஆட்டோவில் இறங்கி உள்ளனர். அப்போது,அவர்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் நடுரோட்டில் நின்றுக் கொண்டிருந்தனர். இதனை பார்க்க போலீசார் உடனே அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கருவில் இரக்கும குழந்தையின் பாலினத்தை கண்டறிய சோனைக்கு வந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து, எஸ்பி சியாமளாதேவிக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து எஸ்பி தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, புரோக்கர்கள் மூலம் ஆள் இல்லாத வீடுகளில் போலியான ஸ்கேன் சென்டர் அமைத்து, பாலினத்தை கண்டறிந்தது தெரியந்துள்ளது. பாலினத்தைக் கண்டறிய ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையும், கருக்கலைப்புக்கு ரூ.25,000 முதல் ரூ.30,00 வரை அந்த கும்பல் பணம் பறிப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, தீவிர விசாரணையில் ஐந்து புரோக்கர்களை கைது செய்தனர்.
Also Read : நடுங்கிய சேலம்.. தந்தை, சித்தியை கொன்ற மகன்.. துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்!
மருத்துவர் சுகுமார் கைது
மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (40), ஜோதி (35) தம்பதி, காவேரி பட்டினத்தைச் சேர்ந்த கோவிந்தன் (47), வெப்பலம்பட்டி, தஞ்சிதம் (39), முத்தம்பட்டி, அமலா (40) உள்ளிட்ட 5 பேர் கைது செய்ப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய நபரான மருத்துவர் சுகமாரை (55) தேடி வந்தனர்.
இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதியான நேற்று மாலை சுகுமாரை போலீசார் கைது செய்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, சுகுமார் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சட்டவிரோத பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் சென்டரை நடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
Also Read : தவெக மாநாடு.. கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல்.. 18 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்!
அவர் திருப்பத்தூர் நகரில் உள்ள துணைச் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோதமாக ஸ்கேன் சென்டர் அமைத்து சிசுக்களின் பாலினத்தை கண்டறிந்து அழித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியும், முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பெண் சிசுக்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்தள்ளனர்.