திருவண்ணாமலையில் இன்றுடன் நிறைவடையும் மகா தீபம் – அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
Karthigai Deepam : திருவண்ணாமலைில் டிசம்பர் 3, 2025 அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் மலை உச்சியில் காட்சி அளிக்கும். 11வது நாளான டிசம்பர் 13, 2025 இன்றுடன் மகாதீபம் நிறைவு பெறுகிறது. இதனை காண பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

மகா தீபம் இன்றே கடைசி நாள்
திருவண்ணாமல, டிசம்பர் 13: திருவண்ணாமலையில் (Tiruvannamalai) உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா (Karthigai Deepam) டிசம்பர் 13, 2025 அன்றுடன் நிறைவடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து 11 நாள் நிகழ்வான திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது இன்றே கடைசி என்பதால் அதனை காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவித்து வருகின்றனர். இதனால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஆண்டு கனமழை பெய்து வந்ததன் காரணமாக, மலையின் உச்சியின் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் கடைசி நாள்
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவ திருத்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று சாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கார்த்திகை தீபத்தன்று மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரிய விடப்படும்.
இதையும் படிக்க : கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே – எப்போ தெரியுமா?
இந்த நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 24, 2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடந்த டிசம்பர் 3, 2025 அன்று காலை, பரணி தீபம் ஏற்றப்ப்டது. அதனைத் தொடர்ந்து கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தித்வா புயல் காரணமாக கனமழை பெய்ததன் காரணமாக, பக்தர்கள் மலை மீது செல்ல தடை விதிக்கப்ப்டடது.
திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
இந்த நிலையில் மகா தீபம் டிசம்பர் 3, 2025 அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் மலை உச்சியில் காட்சி அளிக்கும். இதனையடுத்து 10வது நாளான டிசம்பர் 12, 2025 அன்று மகா தீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்த வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்தபடியும், நகரத்தின் பல்வேறு பகுதிகள், கிரிவலப்பாதையில் இருந்தபடியும் தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க : இந்த 23 நாட்களும் ரேசன் கடைகள் இயங்காது – வெளியான முக்கிய அறிவிப்பு
கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியதில் இருந்து 10 நாட்களும் பக்தர்கள் திருவண்ணாமலை வந்து அருணாச்சலேஸ்வரரையும் மகா தீபத்தையும் வணங்கிவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் 11வது நாளான டிசம்பர் 13, 2025 இன்றுடன் மகாதீபம் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து வழக்கம் போல் இன்று மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம் டிசம்பர் 14, 2025 வரை எரிய விடப்படும். அதன் பிறகு, நாளை அதிகாலை மலையில் உச்சியில் இருந்து கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.