Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண்ணை கொன்ற புலியை பிடிக்க வைத்த கூண்டு.. சிறுத்தை சிக்கியதால் பரபரப்பு!

Leopard Caught In Cage In Nilgiris | நீலகிரியில் புலி தாக்கி பெண் ஒருவர் பலியான நிலையில், அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்துள்ளனர். அந்த கூண்டில் புலிக்கு பதிலாக சிறுத்தை ஒன்று சிக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண்ணை கொன்ற புலியை பிடிக்க வைத்த கூண்டு.. சிறுத்தை சிக்கியதால் பரபரப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Dec 2025 08:18 AM IST

நீலகிரி, டிசம்பர் 04 : நீலகிரி (Nilgiri) மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல் பகுதியான மசினகுடி அருகே மானவல்லா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 69 வயது பெண் ஒருவர் நவம்பர் 24, 2025 அன்று அந்த பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்குள்ள புதருக்குள் மறைந்துக்கொண்டு இருந்த புலி ஒன்று மாடு மேய்த்துக்கொண்டு இருந்த அந்த பெண்ணை தாக்கி கொன்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

அந்த பெண்ணை புலி தாக்கி கொலை செய்த நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பிற்கு அந்த பகுதியில் 5 இரும்பு கூண்டுகளை அமைத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். தினமும் காலையில் கூண்டை சோதனை செய்து வந்த நிலையில், புலி கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வந்துள்ளது.

இதையும் படிங்க : ரயில்வே காவலர் மீது துப்பாக்கி சூடு…சக காவலர் வெறிச் செயல்…என்ன காரணம்!

ஒருவழியாக கூண்டுக்குள் சிக்கிய புலி?

வழக்கம் போல நேற்று (டிசம்பர் 03, 2025) காலை 7 மணிக்கு வனத்துறையினர் கூண்டுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்தது. இதனை கண்டு வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அந்த சிறுத்தையை அவர்கள் அதே பகுதியில் விடுவித்துள்ளனர். இதற்கிடையே புலி சிக்கிவிட்டதாக தகவல் சென்ற நிலையில், கிராம் மக்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளனர்.

இதையும் படிங்க : 1,000 உயரம், 55 மீட்டர் நீளம்.. இந்தியாவின் மிகப்பெரிய கண்ணாடி பாலம் விசாகப்பட்டினத்தில் திறப்பு!

அவர்களிடம் வனத்துறையினர் நடந்ததை கூறியுள்ளனர். அதனை கேட்டு கிராம் மக்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு இனி எந்த விலங்கு சிக்கினாலும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டுவிடுவதாக அவர்கள் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள வனத்துறையினர், கூண்டில் சிக்கிய புலிக்கு 2.5 வயது இருக்கலாம். அதன் காரணமாக அதனை கூண்டில் இருந்து விடுவித்துவிட்டோம் என்று கூறியுள்ளனர். எனினும் பெண்ணை தாக்கி கொன்ற புலியை வனத்துறையினர் இன்னும் பிடிக்காததால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.