தமிழக முதல்வராக பதவி ஏற்றார் விஜய்.. தலைவர்கள் வாழ்த்து!

Leaders Wishes To Chief Minister C Joseph Vijay | தமிழகத்தின் 17வது முதலமைச்சராக தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில், முதல்வராக பதவி ஏற்றுள்ள அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக பதவி ஏற்றார் விஜய்.. தலைவர்கள் வாழ்த்து!

தமிழக முதல் விஜய், ராகுல் காந்தி, பிரதமர் மோடி

Updated On: 

10 May 2026 12:07 PM

 IST

சென்னை, மே 10 : தமிழகத்தின் 17வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் இன்று பதவி ஏற்றார். அவருடன் இணைந்து, 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் புதியதாக பதவி ஏற்றுள்ள தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர்  விஜய்க்கு எந்த எந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் சிறந்த ஆட்சி நடத்த எனது வாழ்த்துக்கள். மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தமிழகத்துடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து

தமிழ்நாடு மக்கள் புதிய தலைமுறை, புதிய குரல், புதிய கற்பனையை தேர்வு செய்துள்ளனர். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து

தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும் தவெக தொண்டர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Follow Us
Related Stories
“தமிழ்த்தாய் வாழ்த்து முதல் மக்கள் முன் முதல் கையெழுத்து வரை”.. உறுதிமொழியேற்பு விழாவில் நடந்த மாற்றங்கள்!!
பணம் இல்லை என பேசாதீங்க.. திசைதிருப்பாதீங்க – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கேள்விகளை அடுக்கிய முக ஸ்டாலின்!
CM Vijay speech: நிதி எவ்வளவு? தமிழ்நாடு அரசின் நிலைமை என்ன? வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என உறுதியளித்த முதல்வர் விஜய்!
200 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால் என்ன? அது எப்படி கணக்கிடப்படும்? முழு விவரம் இதோ!
“விஜய் மாமா”.. பதவியேற்ற மேடையிலேயே குழந்தைகளுக்கு நன்றி சொன்ன விஜய்!!
CM Vijay speech: நான் மன்னர் பரம்பரை அல்ல – அதிரடியாக பேசிய முதலமைச்சர் விஜய்!
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி