சிறுநீரகம் திருடப்பட்டதை உறுதி செய்த விசாரணை குழு.. பரிந்துரைகள் என்னென்ன?

Kidney Theft Case Namkkal: சிறுநீரக திருட்டு வழக்கில் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், மனித உறுப்பு மாற்று சட்டத்தின் படி உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்களை அவ்வப்போது ஆய்வு செய்து முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரகம் திருடப்பட்டதை உறுதி செய்த விசாரணை குழு.. பரிந்துரைகள் என்னென்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

11 Aug 2025 12:48 PM

நாமக்கல், ஆகஸ்ட் 11, 2025: நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி கிட்னியை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. முறைகேடான சிறுநீரக மாற்றுவார் சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார தொட்ட இயக்குனர் வினித் தலைமையிலான குழு விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட இருந்தது அதன் பெயரில் இந்த குழுவானது தொடர்விசாரணையில் ஈடுபட்டு வந்தது இந்த நிலையில் முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம்:

அதில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு தொடர்பாக திருச்சிராப்பள்ளி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மீதான புகார்களின் அடிப்படையில், திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட பகுதியிலிருந்து சிறுநீரக கொடையாளிகள் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டதில்,

மேலும் படிக்க: இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு எதிர்ப்பு.. இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

மேற்கண்ட விசாரணையில் மனித உறுப்பு மாற்றுச் சட்டம், 1994க்கு முரணாக சான்றுகள் பெறப்பட்டும், தனியார் மருத்துவமனைகள் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்தும், நெருங்கிய உறவினர் அல்லாத உயிருள்ள கொடையாளர்களிடம் பணத்திற்காக தரகர்கள் மூலம் உறுப்புகளை பெற்றும், சட்ட நுணுக்கங்களை தவறாகப் பயன்படுத்தி, சில இனங்களில் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணை குழு முன்வைத்த பரிந்துரைகள்:

  • விசாரணை அறிக்கையில் இருதரகர்கள் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிகிறது எனவும், அவர்கள் குறித்து பிஎன்எஸ் 2023 சட்டத்தின்படி உரிய புகாரின் பேரில் எஃப் ஐ ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது. இது போன்ற முறைகேடான சிறுநீரக திருட்டை தடுப்பதற்கு பல்வேறு பரிந்துரைகளும் இந்த குழு முன் வைத்துள்ளது.
  • அதில் திருச்சிராப்பள்ளி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின் மீது பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட உரிமத்தினை ரத்து செய்ய மருத்துவம் மற்றும் ஊரக நலன் பணிகள் இயக்குனர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்
  • இரண்டு தரகர்களின் வங்கி பரிவர்த்தனை விவரம் தொலைபேசி பதிவுகள் மற்றும் இதர சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படடும்
  • மனித உறுப்பு மாற்று சட்டத்தின் படி உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்களை அவ்வப்போது ஆய்வு செய்து முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
  • மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் மட்டுமே நான்கு அங்கீகார குழுக்கள் உள்ளன. இதனை சீரமைத்து மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரம் வழங்கி புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும் ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள நான்கு குழுக்களை மறுசீரமைப்பு செய்யவும் அரசால் உரிய ஆணைகள் வெளியிடப்படும்
  • உடல் உறுப்பு தானம் குறித்து தொடர் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்திட அந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும்
  • உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் செயல் ஆக்கத்தை செம்மைப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் குறித்து உரிய ஆணைகள் அரசால் வெளியிடப்படும்