“தைப்பொங்கல் அல்ல, தேர்தல் பொங்கல்”.. ரூ.3,000 ரொக்கப்பரிசு குறித்து சீமான் விமர்சனம்!!
மக்களுக்கு தை பொங்கலாக இல்லாமல், தேர்தல் பொங்கலாக உள்ளது. அதோடு, பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.6,800 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசு ரூ.10 லட்சம் கோடி கடனில் உள்ளது. ரூ.4.5 லட்சம் கோடியில் நாட்டை உலகின் தலைசிறந்த தேசமாக என்னால் மாற்ற முடியும் என்றும் கூறினார்.

சீமான்
சென்னை, ஜனவரி 11: சென்னை வளசரவாக்கம் அடுத்த சின்னபோரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், பெண்கள் உட்பட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்தனர். கரகாட்டம், ஓயிலாட்டம், பறை இசை உள்ளிட்ட தமிழ் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொண்டர்களுடன் கலந்து பொங்கல் விழாவை கொண்டாடினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், சமீபத்தில் மாணவர்களுக்கு முதலமைச்சர் வழங்கிய மடிக்கணினிகளில் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் படங்கள் இருந்தன.
இதையும் படிக்க: யாருடன் கூட்டணி?.. “பிரேமலதா தான் துணை முதலமைச்சர்”.. தேமுதிக மாநாட்டில் பரபர!!
ஸ்டிக்கர் அரசியல் அல்லவா?
அதனை மாணவர்கள் அவற்றை ஸ்டிக்கர் ஒட்டி அகற்றினர். இது விளம்பர அரசியல் அல்லவா? மக்கள் பணத்தில், உங்கள் படங்களை ஒட்டி கொடுப்பது சரியல்ல என்றார். மேலும், 20 லட்சம் மடிக்கணிகளை 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுத்தால் அது மக்கள் அரசியல். ஆனால், இப்போது மூன்றாம் ஆண்டு மருத்துவம், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவது தேர்தல் அரசியலே என்று அவர் விமர்சித்தார்.
தைப்பொங்கல் அல்ல, தேர்தல் பொங்கல்:
அதேபோல், பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 கடந்தாண்டு கொடுத்திருந்தால் மக்கள் அரசியல், இந்த ஆண்டு தேர்தலை முன்னிட்டு வழங்கப்படுவது தேர்தல் அரசியலாக தான் பார்க்கப்படுகிறது. மக்களுக்கு தை பொங்கலாக இல்லாமல், தேர்தல் பொங்கலாக உள்ளது. அதோடு, பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.6,800 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசு ரூ.10 லட்சம் கோடி கடனில் உள்ளது.
மக்களுக்கான அரசியல் செய்கிறேன்:
ரூ.4.5 லட்சம் கோடியில் நாட்டை உலகின் தலைசிறந்த தேசமாக என்னால் மாற்ற முடியும் என்று கூறிய அவர், வெள்ளத்தை தேங்க வைத்து, தேங்க வைத்து பின்னர் நிவாரணம் வழங்குவது தேர்தல் அரசியல். வெள்ளத்தை தேங்காமல் தடுக்கும் சாலைகள் அமைத்து பராமரிப்பது மக்களுக்கான அரசியல். நான் அந்த அரசியலில் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தவெக – தேமுதிக கூட்டணி உறுதி?.. தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த விஜய்யின் புதிய பிளான்?
ஜனநாயகன் படத்திற்கு அறிக்கை விடுகிறார் முதல்வர்:
‘ஜனநாயகன்’ படத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் அறிக்கை விடுகிறார். தரையில் இருக்கும் ஆசிரியர்களின் போராட்டம் குறித்து கவலைப்படவில்லை. அவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். ஈரோடு தேர்தலில் ஐந்து நிமிடம் கூடுதலாக பேசியதற்காக என் மீது 7 வழக்குகள் போடப்பட்டது. ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு யார்மீதும் வழக்கு இல்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.