இந்த 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Rain Alert : தமிழகத்தில் அக்டோபர் 9, 2025 தேதி அன்று தேனி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்த 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மாதிரி புகைப்படம்

Published: 

09 Oct 2025 16:20 PM

 IST

இந்தியாவில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது. இதனால் வரை வெப்பம் தணிந்து குளிர் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.  மேலும் நீர் நிலைகள் நிறைந்து வருகின்றன. பருவமழையை முன்னிட்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக தொடர்ந்து மழை பெய்து வருவது பட்டாசு வியாபாரிகளிடையே பெரும் கவலையை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் மழை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி தேனி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் அக்டோபர் 10, 2025 அன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதையும் படிக்க : கோவை மக்களின் கனவு.. அவிநாசி மேம்பாலம் இன்று திறப்பு.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

மேலும் நீலகிரி மாவட்டத்துக்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.  இதனயைடுத்து நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அவசியம் இன்றி வெளியே வரவேண்டாம் என்றும், மண் சரிவு ஏற்படும் என்பதால் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என்பதால் அவர்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 4 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் அக்டோபர் 9, 2025 முதல் அக்டோபர் 12, 2025 வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை 2025 அக்டோபர் 9 ஆம் தேதியான இன்று நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : இனி தெருக்களுக்கு சாதிப் பெயர் கூடாது… அதற்கு பதிலாக ‘இந்த’ பெயர் வைக்கலாம்… – தமிழக அரசு உத்தரவு

சமீபத்தில் சென்னை முகப்பேர் அருகே மொட்டை மாடியில் செல்போன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் மழை பெய்யும்போது வீட்டுக்கு வெளியே செல்போன் பேசுவதை தவிர்க்குமாறு