22 உயிரை காவு வாங்கிய விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. பகீர் பின்னணி… தீயணைப்பு அதிகாரி கூறுவதென்ன!

Virudhunagar Cracker Factory Accident: விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் பகீர் பின்னணி தெரியவந்துள்ளது. மேலும், தீயணைப்பு அதிகாரியும் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

22 உயிரை காவு வாங்கிய விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. பகீர் பின்னணி... தீயணைப்பு அதிகாரி கூறுவதென்ன!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்தது எப்படி

Updated On: 

19 Apr 2026 18:44 PM

 IST

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் முத்து மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அந்த பகுதிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று ஏப்ரல் 19- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் முதலில் 3 பேர் உயிரிழந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 6- ஆகவும், 9- ஆகவும், 14- ஆகவும், 19- ஆகவும், 22- ஆகவும் என அடுத்தடுத்து உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இவ்வளவு கொடூரமான பட்டாசு ஆலை விபத்து விருதுநகரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரம்.. தகவல்களை அறிந்துக்கொள்ள இணைய ஏற்பாடு செய்த ECI!

பட்டாசு ஆலை விபத்துக்கு என்ன காரணம்

இதில், பகீர் தகவல் தெரியவந்துள்ளது. பட்டாசு ஆலையில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருள்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, விருதுநகர் தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் பணியாளர்கள் குழுவாக அமைக்கப்பட்டு தினம்தோறும் ஒவ்வொரு பட்டாசு தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

தீ விபத்து – பட்டாசு விபத்து குறித்த விழிப்புணர்வு

மேலும், தீ விபத்து மற்றும் பட்டாசு விபத்தை முன்னதாகவே கண்டறிந்து தடுப்பது எப்படி. விபத்துக்கு பின்னர் சமயோசிதமாக செயல்படுவது எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பொதுவாக பட்டாசு ஆலையில் காலை 11 மணிக்கு முன்னதாகவே அதாவது மதியம் வெயில் வருவதற்கு முன்னதாகவே வெடி பொருள்களுக்கு மருந்து வைக்கும் பணிகளை தொழிலாளர்கள் முடித்திருக்க வேண்டும்.  ஏனென்றால் மதிய வெயில் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் பட்டாசுகள் எளிதில் வெப்பமடைந்து வெடி விபத்து  நிகழ்ந்து விடும் என்பதற்காகவே. அதன் பின்னர் மற்ற பணிகளில் ஈடுபட வேண்டும். இதுவே நடைமுறையாகும்.

விடுமுறை நாளில் செயல்பட்ட பட்டாசு ஆலை

இந்த பட்டாசு ஆலையில் எந்த நடைமுறையில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுவாக பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இந்த பட்டாசு ஆலை செயல்பட்டுள்ளது. இந்த பட்டாசு ஆலைக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஒருமுறை இந்த ஆலைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு பின்னர் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: மெட்ரோவில் சத்தம் போட்டு பேசினால் ரூ.500 அபராதம்.. வெளியான முக்கிய அறிவிப்பு!

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..