Hogenakkal Flood: ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு.. பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!

Hogenakkal Flood Alert: கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள அணைகள் நிரம்பியதால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் அருவிகள் மூழ்கியுள்ளன. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hogenakkal Flood: ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு.. பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!

Hogenakkal

Updated On: 

20 Aug 2025 08:59 AM

தர்மபுரி, ஆகஸ்ட் 20: கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரள மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்கள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1.16 லட்சம் கன அடி நீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 18) தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி நேற்று (ஆகஸ்ட் 19) காலை நிலவரப்படி 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பது தொடர்ந்து மதியம் 12 மணியளவில் 1.15 லட்சம் கன அடி நீர்வரத்து இருந்தது. பின்னர் மாலை 4 மணிக்கு 1.35 லட்சம் கன அடி நீர் ஒகேனக்கல் அருவிக்கு வருகை தந்தது.

அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அறிவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி ஐந்தருவி சினி ஃபால்ஸ் உள்ளிட்ட கருவிகளை மூழ்கடித்த படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் மெயின் அருவி செல்லும் நடைபாதை முழுவதும் தண்ணீர் ஆக்கிரமித்து செல்கிறது.

இதையும் படிங்க: மேகவெடிப்பால் கொட்டிய மழை – உருக்குலைந்து கிடக்கும் பகுதி!

இதனால் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை எச்சரிக்கை விடுத்து வருகிறது. அங்குள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்நிலைகள் சத்திரம், ராணிப்பேட்டை, ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் ஆகிய பகுதிகளில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வருவாய் துறையினர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களுக்கு அலர்ட்… வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

24 மணி நேரமும் கண்காணிப்பு

மேலும் ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நுழைவாயிலை பூட்டி போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வருவாய் துறை அதிகாரிகள் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர நோன்பு சென்று கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக தமிழக  எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு செய்து வருகின்றனர். இதற்கிடையில் பொதுமக்கள் பாதுகாப்பு கருவி மூன்றாவது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.