திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டர்.. அரியலூரில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Helicopter Emergency Landing in Ariyalur | இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவுகிறது. இந்த நிலையில், அரியலூரில் திடீரென ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர், மே 12 : அரியலூரில் திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது போர் பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது. இந்த நிலையில், இன்று ( மே 12, 2025) திடீரென ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அரியலூரில் திடீரென ஹெலிகாப்டட் தரையிறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முடிவுக்கு வந்த இந்தியா – பாகிஸ்தான் விவகாரம்
ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் இந்தியாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கிய நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது. அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) திட்டத்தின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொலை செய்தனர்.
இதன் காரணமாக பாகிஸ்தானும் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது. இந்த நிலையில், மே 10, 2025 அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தியுள்ள நிலையில், அமைதி நிலவி வருகிறது.
அரியலூரில் தறை இறக்கப்பட்ட ஹெலிகாப்டர் – பொதுமக்கள் அச்சம்
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் விலகி தற்போது அமைதி நிலவும் நிலையில், அரியலூர் மாவட்டம் ராமநல்லூரில் கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டத்தில் இன்றுன் ( மே 12, 2025) காலை ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளன. ஆனால், ராணுவ பயிற்சி மேற்கொள்வதற்காக தஞ்சை விமானப் படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் தொடங்கிய நிலையில், அரியலூரில் போர் விமானம் ஒன்று தாழ்வாக பறந்தது பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியது. இதனை தொடர்ந்து தற்போது ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.