Tamilnadu Weather: சென்னையில் கொட்டிய கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ!

Chennai weather today: சென்னையில் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியது. பல பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வரும் நாட்களில் சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கணித்துள்ளார்.

Tamilnadu Weather: சென்னையில் கொட்டிய கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ!

வானிலை நிலவரம்

Updated On: 

16 Sep 2025 08:10 AM

 IST

சென்னை, செப்டம்பர் 16: சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழையால் குளிர்ச்சியான கால நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். நேற்று (செப்டம்பர் 15) பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவிலும் பெரிய அளவில் மழை வருவதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருந்தது. ஆனால் அதிகாலை 3 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய நல்ல மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் சிறிதளவு தேங்கி பின்னர் வடிந்தது. அதிகாலையில் பணிக்கு செல்லும் மக்கள் இந்த மழையால் சற்று அவதியடைந்தனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், அண்ணாசாலை, சைதாப்பேட்டை, தி.நகர்., கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என பல பகுதிகளில் மழையானது பெய்தது. அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை 5 மணி வரை நீடித்தது.

தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்

Also Read: அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை.. சென்னையில் ரேபிஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..

இதனிடையே தமிழ்நாடு தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளப் பதிவில், “வேலூரில் இருந்து புயல்கள் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதியை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகின்றன. மேலும் அடுத்த 2 மணி நேரத்திற்குள் நகரின் மேற்கு எல்லையை அடைய வாய்ப்புள்ளது.

Also Read: இனி வெயில் இல்லை.. அடுத்த 7 நாட்களுக்கு கொட்டித்தீர்க்க போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்

நாளை (செப்டம்பர் 16) சென்னைக்கு மேகமூட்டத்துடன் கூடிய அற்புதமான வானிலை நாளாக இருக்கும். மேலும் வரும் நாட்களுக்கு முன்னறிவிப்பு என்னவென்றால்  அடுத்த 3 நாட்கள் (செப்டம்பர் 16 – 18 வரை) சென்னை உட்பட வட தமிழ்நாடு முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். அதன்படி  செப்டம்பர் 2 ஆம் பாதி ஒட்டுமொத்த வட தமிழ்நாட்டிற்கு இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு மிகவும் நன்றாக இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் தென்னிந்திய கடற்கரை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேசமயம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நல்ல மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல் வடதமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.