தமிழகத்தில் இந்த 2 நாட்கள் மழை கொட்டித் தீர்க்க போகுது.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Two Days Heavy Rain Alert For Tamil Nadu | தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, மே 12 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் உடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
ஏப்ரல் மாதம் முதலே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையான இருந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தான், தமிழகத்தில் கோடை மழை பெய்ய தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் வெப்பம் தனிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் உடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பள்ளி, கோயில் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூட திட்டம்? முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி
மே 13, 14 தேதிகளுக்கான மழை எச்சரிக்கை
மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்.. பதிலுக்கு முதல்வர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
மே 15, 16 தேதிகளில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் மே 15, 16 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.