மார்ச் 7 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Heat Temperature Will Increase In Tamil Nadu | இன்று (மார்ச் 04, 2026) மார்ச் 07, 2026 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் 7 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Mar 2026 23:54 PM

 IST

சென்னை, மார்ச் 04 : தமிழகத்தில் (Tamil Nadu) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 07, 2026 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது, மார்ச் 07, 2026 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அதிகாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 09, 2026 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : Udhayanidhi Stalin Tamil Nadu Election: முதல் தேர்தலில் அமோக வெற்றி… குறுகிய காலத்தில் அரசியல் சக்தியாக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

மார்ச் 07, 2026 முதல் மார்ச் 09, 2026 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, மார்ச் 05, 2026 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பணிமூட்டம் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழக சட்டமன்ற தேர்தல்… களமிறங்கும் மத்திய அமைச்சர்கள் குழு? பாஜக தலைமையின் பலே திட்டம்!

மிதமான பனிமூட்டம் காணப்படும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகரிக்கும் என கூறப்பட்டாலும், அதிகாலை நேரங்களில் சற்று பனிமூட்டம் நிலவும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
TVK Exit Poll Result: ஆட்சி அதிகார கனவில் தவெக.. 40 தொகுதிகளே கை கொடுக்க வாய்ப்பு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக் கணிப்பு!
NTK Exit Poll Results: 4 முதல் 5 சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு கிடைக்கும்? எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்?
ADMK Exit Poll Result: வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஆட்சியை கைப்பற்றுமா அதிமுக? எத்தனை சதவீத வாக்குகள் பெரும்?
DMK Exit Poll Results: 169 தொகுதிகளை எட்டி பிடிக்கும் திமுக.. 55% வாக்குகளை அசராமல் அடிக்கும்.. கருத்து கணிப்பில் தகவல்!
Tamil Nadu Election Exit Poll Result: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. 2- ஆவது முறை அரியணை ஏறுகிறார் மு.க.ஸ்டாலின்!
புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வரலாமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..