வந்தே பாரத் ரயிலில் திடீரென கிளம்பிய புகை.. அலறிய பயணிகள்.. என்னாச்சு?

Tirunelveli Chennai Vande Bharat Rail : திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் ஏசி பெட்டியில் இருந்த தீடீரென புகை வெளியேறியது. ஏசியில் ஏற்பட்ட பிரச்னையால், புகை வெளியேறியது தெரியவந்தது. இதனை அடுத்து, ஏசியில் இருக்கும் பிரச்னை செய்யப்பட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

வந்தே பாரத் ரயிலில் திடீரென கிளம்பிய புகை.. அலறிய பயணிகள்..  என்னாச்சு?

வந்தே பாரத் ரயில்

Updated On: 

09 Jul 2025 15:12 PM

சென்னை, ஜூலை 09 : திருநெல்வேலியில் இருந்து சென்னை  (Tirunelveli Chennai Vande Bharat Rail) நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் (Vande Bharat Train)  ஏசியில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏசியில் ஏற்பட்ட கோளாறால், பெட்டி முழுவதும் புகை பரவியது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்காலிகமாக கோளாறு சரி செய்யப்பட்டு புறப்பட்டு சென்றது. இதில், பயணிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை. நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  இந்திய ரயில்களில் முக்கிய சேவையாக இருப்பது வந்தே பாரத் ரயில்.  அதிவேகமாக செல்வதால் பயணிகள் வந்தே பாரத் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.  நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில்  வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை – நெல்லை, கோவை – சென்னை, கோவை – பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக, திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு செவ்வாய் கிழமை தவிர, வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரூட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில், சென்னை எழும்பூருக்கு மதியம் 1.55 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னையில் மதியம் 2.45 மணியில் இருந்து திருநெல்வேலிக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடைகிறது.  இந்த நிலையில் தான், வந்தே பாரத் ரயிலில் அசம்பாவிதம் நடந்துள்ளது.

Also Read : போராட்டம் எதிரொலி: தமிழ்நாட்டில் இன்று பேருந்து, ஆட்டோ இயங்குமா?

வந்தே பாரத் ரயிலில் திடீரென கிளம்பிய புகை


அதாவது, 2025 ஜூலை 9ஆம் தேதியான இன்று காலை வழக்கம் போல் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. அப்போது, வந்தே பாரத் ரயில் திண்டுக்கல் அருகே வேல்வார்கோட்டையில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பெட்டியில் இருந்து புகை கிளம்பியது.

இதனால், பயணிகள் அலறி அடித்து வேறு பெட்டிகளுக்கு ஓடினர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏசியில் இருந்து புகை வெளியேறியதால், வேல்வார்கோட்டை அருகே நடுவழியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து, ரயில் ஓட்டுர் மற்றும் பிற அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெட்டியில் சோதனையிட்டனர்.

Also Read : பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்து.. பதைபதைக்க வைக்கும் பின்னணி!

இதில், ஏசியில் இருந்து புகை வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, மெக்கானிக்கை தொடர்பு கொண்டு வரவழைக்கப்பட்டது. இதனை அடுத்து, ஏசியில் இருந்து கோளாறு தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. இதற்காக ரயில் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, ரயிலில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு புறப்பட்டு சென்றது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.