10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. யாருக்கு இந்த லேப்டாப் கிடைக்கும்?

Free Laptop Scheme: இதற்கு முன்னதாக, 2025–2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஒரு ஆண்டிற்கு 10 லட்சம் மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின்படி டேப் அல்லது லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை செயல்படுத்த ஒரு உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது.

10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. யாருக்கு இந்த லேப்டாப் கிடைக்கும்?

கோப்பு புகைப்படம்

Published: 

05 Jan 2026 06:52 AM

 IST

சென்னை, ஜனவரி 5, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மக்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜனவரி 5, 2026 தேதியான இன்று, தமிழகத்தில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக, 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இதில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட அறிவிப்பு:

இதற்கு முன்னதாக, 2025–2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஒரு ஆண்டிற்கு 10 லட்சம் மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின்படி டேப் அல்லது லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை செயல்படுத்த ஒரு உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது.

லேப்டாப் கொள்முதல் – டெண்டர் விவரங்கள்:

அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு நிறுவனங்களின் டெண்டர்கள் ஆய்வு செய்யப்பட்டு, HP, Dell, Acer ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான பணி ஆணை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் வழங்கப்பட்டது.

“உலகம் உங்கள் கையில்” – திட்டத்தின் கருப்பொருள்:

இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற, “உலகம் உங்கள் கையில்” என்ற அறிவூட்டும் கருப்பொருளின் கீழ், கல்லூரியில் பயிலும் மாணவ–மாணவியருக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்… நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டு

அந்த அறிவிப்பின்படி, இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக, 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, இன்று சென்னை நந்தம்பாக்கம் – சென்னை வர்த்தக மைய (Chennai Trade Centre) வளாகத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

லேப்டாப் தொழில்நுட்ப அம்சங்கள்

“கல்வி அனைவருக்கும்! உயர்வு ஒவ்வொருவருக்கும்!” என்ற நோக்கத்துடன், உலகத் தரமான
Dell, Acer, HP நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

மடிக்கணினிகளில்:

  • Intel i3 / AMD Ryzen 3 Processor
  • 8 GB RAM
  • 256 GB SSD
  • Windows 11 Home Strategic
  • BOSS Linux OS
  • மேலும், கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365,
  • செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro – 6 மாத இலவச சந்தா,
  • உயர்தர மடிக்கணினி பை ஆகியவையும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க: தமிழகத்தில் தொடரும் மிதமான மழை.. எத்தனை நாட்களுக்கு? எங்கே? முழு விவரம்..

வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு துணை

அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல்,

  • வேலைவாய்ப்பு உருவாக்கம்
  • சமூக–பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கும் நேரடி ஆதாரமாக அமைகின்றன.

டிஜிட்டல் திறன் மேம்பாட்டின் மூலம், மாணவர்கள்:

  • தகவல் தொழில்நுட்பம் (IT)
  • மென்பொருள் உருவாக்கம்
  • தரவு உள்ளீடு
  • டிஜிட்டல் மார்க்கெட்டிங்
  • கிராபிக் டிசைன்
  • கோடிங்
  • வலை வடிவமைப்பு
  • AI கருவிகள்
  • Freelancing போன்ற துறைகளில் புதிய வாய்ப்புகளைப் பெறத் தகுதியானவர்களாக உருவாகிறார்கள்.

தமிழ்நாட்டின் டிஜிட்டல் கனவு – ஒரு கல்விப் புரட்சி

இதன் மூலம், குடும்ப வருமானம் உயர்ந்து, கிராம–நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகள் உருவாகும் வாய்ப்பு கிடைக்கும். “கல்வி மூலம் சமூக மேம்பாடு: தொழில்நுட்பம் மூலம் பொருளாதார முன்னேற்றம்” என்பதையும். “உலகம் உங்கள் கையில்” என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டம் ஆகும்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் வாரணாசி திரைப்படம் படைக்கும் புதிய சாதனை
10 ஆண்டுகளாக கோதுமைக்கு பதிலாக ரகுல் ப்ரீத் சிங் பயன்படுத்தும் மாவு இது தான் - அப்படி என்ன ஸ்பெஷல்?
செல்லப்பிராணியாக வளர்த்த பாம்பு கடித்து விரலை இழந்த இளைஞர் - சீன இளைஞருக்கு நடந்த சோகம்
7 மோதங்கள் தொடர்ந்து நடக்கும் போர், முக்கிய நபர் இறப்பார்... 2026 குறித்து நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகளால் சர்ச்சை