“அரசின் 4 திட்டங்களால் மக்களுக்கு மாதம் ரூ.4,000 மிச்சம்”.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
four schemes of tamilnadu: 4 ஆண்டுகளில் நாடே போற்றும் வகையில் நிறைய திட்டங்களை கொடுத்துள்ளதாகவும், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். தெரிவித்தார். குழந்தைகள், பெண்களை மேடை ஏறி, அவர்களை பெருமைப்படுத்தி மகிழ்கிறோம் என்றார்.

கோப்பு புகைப்படம்
திருவண்ணாமலை, டிசம்பர் 27: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 27) நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.2,095.07 கோடி மதிப்பிலான 314 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 2,66,194 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து, இன்று திருவண்ணாமலை மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பல்வேறு திட்டங்களை திறந்து வைத்ததோடு, கள ஆய்வும் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் கூறியதாவது, தமிழ்நாடு உயர வேண்டும் என உழைக்கிறோம். ஆனால் தமிழகத்திற்கான நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. நிதி இல்லாமல் நாடே திரும்பி பார்க்கும் வகையில் ஆட்சி அமைத்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிக்க : பாமகவில் அடுத்த அதிரடி.. ஜி.கே மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி அறிக்கை..
தமிழ்நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி:
மேலும் பேசிய அவர், இந்த வளச்சிதான் பலரின் கண்களை உணர்த்துகிறது. தமிழ்நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். பொறுப்புள்ள மத்திய அமைச்சர் அத்தனை வெறுப்பு உணர்ச்சியை பரப்புகிறார். சவால்களை முறியடித்து முன்னேறியுள்ளோம். தலைநகரைக்கூட நிர்வகிக்க முடியாமல் பாஜக அரசு திணறி வருகிறது. டெல்லி காற்று மாசு, ரூபாய் வீழ்ச்சி உள்ளிட்டபல பிரச்சினைகளை மத்திய அரசால் சரிசெய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமையப்போவது உறுதி என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.
4 திட்டங்கள் மூலம் மாதம் ரூ.4,000 மிச்சம்:
அதேபோல், 4 ஆண்டுகளில் நாடே போற்றும் வகையில் நிறைய திட்டங்களை கொடுத்துள்ளதாகவும், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். குழந்தைகள், பெண்களை மேடை ஏறி, அவர்களை பெருமைப்படுத்தி மகிழ்கிறோம். நாடு போற்றக்கூடிய திட்டங்களை தந்தது திமுக அரசு. அவ்வாறு, தமிழக அரசின் 4 திட்டங்கள் மூலம் மக்களுக்கு மாதம் ரூ.4,000 மிச்சமாகிறது.
இதையும் படிக்க : எந்த பேச்சுவார்த்தையும் கூடாது.. அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பில் எச்சரிக்கை..
1.30 கோடி பெண்களுக்கு உரிமைத்தொகை:
1.30 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. அதில், திருவண்ணாமலையில் 4 லட்சத்திற்கு அதிகமான பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 900 கோடி முறை மகளிர் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். 19.4 லட்சம் குழந்தைகளுக்கு தினமும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி பலரின் கண்களை கூசச் செய்கிறது. மத்திய பாஜக அரசு நமக்கான நிதியை கொடுக்கவில்லை. தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே ஆளுநரை அனுப்பி வைத்துள்ளனர் என்று சாடினார்.