விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ – யார் இவர்?

AIADMK Leader Joins TVK : ஓ.பன்னீர்செல்வம் அணியில் இடம்பெற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிராபகர் ஜனவரி 2, 2026 அன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். அவர் யார்? தவெகவில் இணைந்ததற்கான பின்னணி என்ன? என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ - யார் இவர்?

அதிமுகவில் இணைந்த தவெக எம்எல்ஏ ஜே.சி.டி பிராபகர்

Updated On: 

02 Jan 2026 21:17 PM

 IST

சென்னை, ஜனவரி 2:  முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் (O.Panneeselvam) ஆதரவாளருமான ஜேசிடி பிரபாகர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (Vijay) முன்னிலையில், கட்சியில் இணைந்தார். இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏவான செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், மேலும் ஒரு அதிமுக பிரமுகர் தவெகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இதற்கான காரணம் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

யார் இந்த ஜேசிடி பிரபாகரன்?

எம்ஜிஆர் அதிமுகவை காலத்தில் இருந்து அவருடன் பயணித்து வருகிறார் ஜேசிடி பிராபகரன். இவர் எம்ஜிஆருடன் மிகுந்த நெருக்கமாக இருந்து வந்துள்ளார். கடந்த 1980ல் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டபோது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் செயல்பட்டார். மேலும் அதிமுகவை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தான் அவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.

இதையும் படிக்க : தமிழக காங்கிரஸ் அழிவுக்கு செல்வப்பெருந்தகையே சான்று…அண்ணாமலை நேரடி அட்டாக்!

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ

தவெகவில் இணைந்த பின்னர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், “தமிழ்நாட்டில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கையோடு தான் விஜயின் இயக்கத்தில் நான் இணைந்தேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை முதன்முறையாக சந்தித்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, இன்று விஜய்யை சந்தித்தபோதும் எனக்குள் மீண்டும் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும் அவர், நல்லாட்சி அமைய வேண்டும் என அவர் மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்பை விஜய் நிறைவேற்றுவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் விஜய்யின் பெயர் ஒரு முழக்கமாக மாறியுள்ளது என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், தவெகவில் எனக்கு பொறுப்பு கிடைக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும். மக்களுக்கு முன்னேற்றம் வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றத்தை தவெககொண்டு வரும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : மதிமுக அழைப்பிதழில் பிரபாகரன் படம் தான் காரணமா?..வைகோ நிகழ்ச்சியை புறக்கணித்த காங்கிரஸ்..

அதிமுக நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த ஜே.சி.டி. பிரபாகர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு என்னிடம் அளவில்லாத பாசம் இருந்தது. அவரது புகழை பரப்பும் இயக்கமாக தவெகவை நான் பார்க்கிறேன். அதிமுகவை ஒன்றிணைக்க ஒற்றுமையே பலம் என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் அச்சிட்டு முயற்சி செய்தோம். ஆனால் தற்போது அதிமுகவில் அந்த முயற்சி வெற்றி பெறும் சூழல் இல்லை என்று கூறினார்.

சமீபத்தில் மூத்த அதிமுக தலைவர் செங்கோட்டையன் இணைந்ததற்குப் பிறகு, அதிமுகவினர் தொடர்ந்து தவெகவில் இணையும் சூழல் உருவாகியுள்ளதாகவும், தற்போது அதிமுக மீது விரக்தியில் உள்ள அடிமட்ட தொண்டர்களுக்கு விஜய் மீது நம்பிக்கை உள்ளது. அதனால் அதிமுக தொண்டர்கள் பெருமளவு தவெகவில் இணைவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த இணைப்பு அதிமுகவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி