தமிழ்நாட்டில் 13 இடங்களில் பட்டாசினால் தீ விபத்து – தீயணைப்புத்துறை சொன்ன பகீர் தகவல்

Fire Accidents on Diwali : சென்னை உட்பட தமிழ்நாட்டில் பட்டாசினால் 13 இடங்களில் அக்டோபர் 20, 2025 அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 13 இடங்களில் பட்டாசினால் தீ விபத்து - தீயணைப்புத்துறை சொன்ன பகீர் தகவல்

மாதிரி புகைப்படம்

Published: 

20 Oct 2025 22:03 PM

 IST

தமிழகத்தில் அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி (Diwali) பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் (Crackers) வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். அதிக அளவில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் பெரும்பாலான இடங்களில் காற்று மாசுபாடு அடைந்துள்ளது. குறிப்பாக தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 19, 2025 அன்று  சென்னையில் மட்டும் காற்று தரக் குறியீடு 109 ஆக அதிகரித்தது. இது மக்கள் சுவாசிக்க கூடாத அளவு என கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளியன்றும் மக்கள் அதிக அளவு பட்டாசுகளை  வெடித்து வருகின்றனர். அதிகபட்சமாக டெல்லியில் காற்றின் தரம் 400 என்ற மிக மோசமான நிலையை அடைந்தது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகத்தில் பட்டாசினால் 13 விபத்துகள் நடந்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் 13 இடங்களில் தீ விபத்து

தமிழகத்தில் அரசால் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இது உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மக்கள் இந்த நேரக் கட்டுப்பாட்டை பொருட்படுத்தாமல் நாள் முழுவதும் பட்டாசு வெடித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : சென்னையில் தீபாவளி காலை பொழுது மழையுடன் தொடங்கும்.. பிற மாவட்டங்களில் எப்படி இருக்கும் – பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.  பட்டாசை வெடிப்பது குறித்து தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டும் இந்த தீ விபத்து தொடர்கிறது.  இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் உயிர் சேதம் எந்த இடத்திலும் நேரவில்லை என்பது தான்.

இதையும் படிக்க : வெறிச்சோடிய சென்னை.. 18 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!

பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட போட்டியால் பறிபோன உயிர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எதிரெதிர் வீட்டில் வசிக்கும் வேலு மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியிருக்கிறது. அப்போது வேலு ஆத்திரத்தில் தனது வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியால் பார்த்திபனை தாக்க, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் அருகே உள்ள அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் வேலுவை தேடி வருகின்றனர்.