ரயில் நிலையத்தில் வெயிட் பண்ணுறீங்களா? இனி அபராதம் தான்.. வெளியான முக்கிய தகவல்

Central Railway Station : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட் எடுத்து நீண்ட நேரம் தங்கினால் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். ரயில்களில் பயணிக்கும் மக்களே, நடைமேடையில் நீண்ட நேரம் இருக்கவும், ஓய்வு எடுக்கவும் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

ரயில் நிலையத்தில் வெயிட் பண்ணுறீங்களா? இனி  அபராதம் தான்.. வெளியான முக்கிய தகவல்

ரயில் நிலையம்

Updated On: 

28 Sep 2025 08:13 AM

 IST

சென்னை, செப்டம்பர் 28 :  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில்வே. வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு மக்கள் பெரும்பாலும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக சில மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.

சென்னையில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு எழும்பூர், சென்டரில் இருந்து ரயில்கள் புறப்படும்.  இதனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போது அலைமோதும். பயணிகள் கூட்டம் மட்டுமில்லாமல், பயணிகளை வழியனுப்புவதற்காக உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் நடைமேடை டிக்கெட் எடுத்து செல்கின்றனர். மேலும், நடைமேடை டிக்கெட் எடுத்து, பல மணி நேரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கி இருப்பதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.  அதாவது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மதுசூதன ரெட்டி கூறுகையில், ” சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தினமும் 3 லட்சத்திற்கு அதிகமானோர் வருகை தருகின்றனர்.

Also Read : அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

ரயில் நிலையத்தில் வெயிட் பண்ணுறீங்களா?

அவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில், பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளை தவிர, பொது மக்களும் தூங்குவதற்காக வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வரும் பலர் ரயில் நிலைய நடைமேடை அனுமதி டிக்கெட் எடுத்துக் கொண்டு விரைவு ரயில் பகுதியில் தூங்குகின்றனர். இப்படி நீண்ட நடைமேடையில் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

Also Read : மனநோயாளியாக மாறிய சீமான்.. அண்ணா குறித்து அவதூறு பேச்சுக்கு சீமான் மீது குவியும் கண்டனங்கள்..

ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நடைமேடை டிக்கெட் எடுத்து, நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் தங்குவது வீதிகளை மீறுவதாகும். இதற்கு அபராதம் விதிக்கப்படும்” என்று கூறினார்.  எனவே, பயணிகள் இனி வரும் நாட்களில் நீண்ட நேரம் நடைமேடை டிக்கெட் எடுத்து  நீண்ட நேரம் தங்கிக் கொள்ள அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.