சித்தியிடம் தொடர்ந்து தகராறு.. அடித்துக்கொன்ற தந்தை.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Perambalur Crime News: பெரம்பலூர் அருகே அரும்பாவூரில், குடும்பத் தகராறில் தந்தை ராஜா தனது மகன் ராசுக்குட்டியை கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது மனைவியுடனான பிரச்சினையால் ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சித்தியிடம் தொடர்ந்து தகராறு.. அடித்துக்கொன்ற தந்தை.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்!

கொலை செய்யப்பட்ட ராசுக்குட்டி

Updated On: 

28 Aug 2025 06:21 AM

பெரம்பலூர், ஆகஸ்ட் 28: பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப தகராறில் மகனை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் அருகே அரும்பாவூர் என்ற ஊர் உள்ளது. இதன் அருகில் இருக்கும் அ.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. 43 வயதான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அதன்படி முதல் மனைவியான ரேவதிக்கும் ராஜாவுக்கும் மூன்று மகன்கள் இருந்த நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த உமா என்ற பெண்ணை கரம் பிடித்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளான். இதற்கிடையில் இரண்டாவது திருமணம் நடைபெற்றதால் கடும் ஆத்திரத்தில் இருந்த முதல் மனைவியான ரேவதியின் மகன்கள் அடிக்கடி உமாவிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

குறிப்பாக முதல் மனைவியின் மகனான 20 வயதாகும் ராசுக்குட்டி என்பவர் உமாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நெல் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆகஸ்ட் 26 இரவு அ.மேட்டூர் பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் அலங்கார ஏற்பாடுகளை தனது நண்பர்களுடன் செய்து கொண்டிருந்தார். அதற்கு முன்னதாக உமாவிடம் பிரச்னை செய்துள்ளார்.

Also Read: அட்வைஸ் பண்ண சென்ற இடத்தில் இளைஞர் கொலை.. தாய் உட்பட 6 பேர் கைது!

இதனையெல்லாம் உமா தனது கணவர் ராஜாவிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இப்படியான நிலையில் ராசுக்குட்டி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் தக்க சமயம் பார்த்து  அவரது தந்தை ராஜா காத்திருந்தார். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு அதே பகுதியில் களைப்பினால் ராசுக்குட்டி நண்பர்களுடன் படுத்து தூங்கியுள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட ராஜா நேராக அங்கு சென்று கடப்பாரையால் ராசுகுட்டியின் தலையில் அடித்து அவரை துடிதுடிக்க கொலை செய்தார்.

பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்று விட்டார் இதற்கிடையில் ரத்த வெள்ளத்தில் ராசுக்குட்டி உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக அரும்பாவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராசுக்குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து ராசுக்குட்டியை கொலை செய்த வழக்கில் தந்தை ராஜா மற்றும் அவரது இரண்டாவது மனைவி உமா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Also Read: பார்க்கிங் பிரச்னை.. முதியவர் கொலை.. கடலூரில் ஷாக் சம்பவம்!

இதனிடையே ராசுக்குட்டி தலைமறைவான நிலையில் அவரது மனைவியான உமாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.