Minister Regupathy: திராவிட மாடல் அரசு பெண்களுக்கு துணை நிற்கும்.. இபிஎஸ்-ஐ விளாசிய அமைச்சர் ரகுபதி!
Tamil Nadu Women's Safety: எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து, சட்ட அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் சிறுமிக்கு நடந்த அதிர்ச்ச்சி சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டதையும், பெண் காவலாளிகளை நியமிக்க உத்தரவிடப்பட்டதையும் ரகுபதி சுட்டிக்காட்டினார்.

எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி
சென்னை, ஜூன் 9: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) சமீப காலமாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்திற்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி (Minister S. Regupathy) அறிக்கை வெளியிட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், மீண்டும் டெல்லியில் மத்திய அரசாங்கத்திற்கு சாதகமாக செயல்படுவதாகவும், தங்களுக்கு நடந்த குற்றங்களுக்கு எதிராக புகார் அளிக்கும் மாணவிகளுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் அமைச்சர் ரகுபதி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கையின் முக்கிய கருத்துகள்:
- தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் காவலாளி ஒருவரால் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதே விடுதியில் ஏற்கனவே தங்கியிருந்த 100-க்கு மேற்பட்ட மாணவிகளிடம் வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளரா என தனிதனியாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
- முதற்கட்ட விசாரணையில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இக்கொடுமையை மிக துணிச்சலோடு எதிர்கொண்டு புகார் அளித்த மாணவிக்கு இந்த திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.
- திராவிட மாடல் ஆட்சியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு அரணாக இருப்பதால்தான் இந்த மாதிரி குற்ற சம்பவங்களை எதிர்த்து தைரியமாக புகார் அளிக்க பெண்கள் முன்வந்துள்ளனர். கடந்த கால அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்களே தாக்குதல்களுக்குள்ளாகிய மோசமான சூழல் நிலவியதை தமிழ்நாட்டு பெண்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை
அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கை:
*‘டெல்லி அடிமை’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் பழனிசாமி.
தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் காவலாளியால் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளான். மேற்கொண்டு விடுதியில் தங்கியிருந்த 100 க்கும் மேற்பட்ட மாணவிகளிடம்… https://t.co/FOncKKNTEQ
— எஸ்.ரகுபதி (@regupathymla) June 9, 2025
- திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக தண்டனையை மிக கடுமையாக்கியதோடு குற்றவாளிகளை விரைந்து கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, அதிவேகமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தண்டனையும் வழங்கி கொடுத்தது திராவிடமாடல் அரசு. அரசின் இத்தகைய செயலையும், காவல்துறையின் உடனடி செயல்பாட்டையும் சென்னை உயர்நீதிமன்றமே பாராட்டியுள்ளது.
- கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி வழக்கை அதிமுக அரசு எப்படி கையாண்டது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதேநேரத்தில், தற்போது குற்றங்களை தடுப்பதோடு மட்டுமல்லாமல் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பெண்களுக்கு ஆதரவாக இருந்துவரும் திராவிட மாடல் அரசைப்பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
- எப்போதெல்லாம் அமித்ஷாவிற்கும் , டெல்லிக்கும் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் டெல்லி கண்ட்ரோலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஓடோடி வந்து வீண் அவதூறுகளை பரப்பி காப்பாற்றத் துடிக்கிறார். ‘டெல்லி அடிமை’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் பழனிசாமி.