தீவிரமடையும் மோன்தா புயல்… இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வெதர்மேன் எச்சரிக்கை

Heavy Rain Alert : வங்கக் கடலில் மோன்தா புயல் வலுவடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

தீவிரமடையும் மோன்தா புயல்... இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வெதர்மேன் எச்சரிக்கை

பிரதீப் ஜான்

Updated On: 

28 Oct 2025 07:05 AM

 IST

வங்கக் கடல் மோந்தா புயல்  (Cyclone Montha) காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அக்டோபர் 27, 2025 முதல் இடியுடன் கூடிய மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இந்த புயல் தற்போது வங்கக்கடலின் மத்திய பகுதியில் மையம்கொண்டு, மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரை பலத்த காற்றுடன் வடமேற்கே நகர்ந்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில்,  மோந்தா’புயல் கடுமையான புயலாக வலுப்பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா அருகே கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை (Heavy Rain) பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் கனமழை பெய்யும்

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ்  பக்கத்தில் சென்னை மழை குறித்து பதிவிட்டுள்ளார்.  அவரது பதிவில், சென்னையில் மிதமான மழை தொடர்ந்து பெய்துக்கொண்டிருக்கிறது. இதுவரை சென்னை முழுவதும் கன மழை எங்கும் பதிவாகவில்லை. பெரும்பாலான இடங்களில் 20 முதல் 30 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இது எதிர்பார்த்தபடியே நடைபெற்று வருகிறது. மேலும், அக்டோபர் 28, 2025 காலை வரை மொத்தமாக 50 முதல் 70 மில்லிமீட்டர் மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்க : திருவள்ளூரில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை!

மழை குறித்து பிரதீப் ஜான் பதிவு

 

பள்ளிகளுக்கு விடுமுறை

இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் அக்டோபர் 28, 2025 அன்று காலை முதல் கனமழை பெய்யும் என்றும், சில இடங்களில் மிக கனமழை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன் ஒரு பகுதியாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கைவிடுக்கப்ப்டடுள்ளன. சென்னையில் ஆறுகள் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், புயல் வலுவடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வானிலை மையம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கியுள்ளது. மழை தீவிரமடையும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 28, 2025 இன்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : வங்கக் கடலில் உருவானது மோன்தா புயல்..

தொடர்ந்து கனமழை பெய்யும் நிலையில, நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் நீர் தேங்கி வருவதாகவும், மாநகராட்சி மற்றும் மின்சாரத் துறைினர் பணி மேற்பார்வையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.