Coimbatore: சாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் கல்லை போட்டு கொலை!
Coimbatore Crime News: கோயம்புத்தூரில் சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நபர் கல்வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்யப்பட்ட இளைஞர், 2018ல் சிறையில் கைதியை கொலை செய்த வழக்கில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

கோவை கொலை சம்பவம்
கோயம்புத்தூர், ஆகஸ்ட் 28: கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாலை ஓரத்தில் உள்ள கடை ஒன்றின் முன்னால் தூங்கிக் கொண்டிருந்த நபர் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு 25 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து காணலாம். இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவலின் படி, “இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் சம்பவ நாளன்று செல்வபுரத்தில் உள்ள SIHS காலனிக்கு அருகில் இருக்கும் ஒரு கடையின் முன்பாக முகத்தை போர்வையால் மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார். இதில் தூங்கிக் கொண்டிருந்த நபர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர் – ஷாக்கான மக்கள்
இதற்கிடையில் அதிகாலையில் அந்த வழியாக வந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் கடை முன் தூங்கிக் கொண்டிருந்தவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு உடனடியாக செல்வபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அழகுராஜ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்தவர் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பார்க்கிங் பிரச்னை.. முதியவர் கொலை.. கடலூரில் ஷாக் சம்பவம்!
இறந்தவர் சுமார் 50 வயதுமிக்க நபர் என தெரிய வந்த நிலையில் அவர் யார் என்பது குறித்த அடையாளம் தெரியாமல் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சிசிடிவி கேமராவில் சிக்கிய கொலையாளி
இதற்கிடையில் கொலை நடந்த இடத்தில் மோப்பநாய் மற்றும் தடவி தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதே சமயம் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் ஒருவரை கண்டறிந்தனர். அவரது அடையாளங்களைக் கொண்டு நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பேரூர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் தற்கொலை.. ஐடி ஊழியரின் சோக முடிவு!
அவரிடம் நடத்தப்பட்ட விசாலையில் அவரும் அந்த நபரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் விஜய் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு பிரச்சனைக்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சிறையில் ஏற்பட்ட தகராறில் ஒரு கைதியின் தலையில் விஜய் இதேபோன்று கல்லால் அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. ஜாமினில் வெளிவந்த பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் ஒரு கொலையைச் செய்துள்ளார்.
ஆனால் இதற்கு எந்த வித தூண்டுதலும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து விஜயிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இறந்த நபர் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.