தலைமை செயலாளர் மாற்றம்.. தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர் ஸ்டாலின்..
பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தில் தேர்தல்கள் நடந்தபோது, அங்கு டிஜிபி அல்லது தலைமைச் செயலாளர் மாற்றப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்ற பீகார் மாநிலத்திலும் அதே நிலை தான். அங்கு கூட டிஜிபி அல்லது தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி மீது தேர்தல் ஆணையத்தின் கவனம் திரும்பி, பாஜக தூண்டுதலின் பேரில் அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 8, 2026: தமிழகத்தில் வரவிருக்கும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணையம் தரப்பில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த முருகானந்தம், ஐஏஎஸ் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்:
பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில்…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 8, 2026
அந்த பதிவில், ” பாஜகக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யாமல் இருந்தாலும், தேர்தல் களத்தில் முழுமையாகச் செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம், தற்போது ஒருதலைப்பட்சமான மற்றும் அளவுக்கு மீறிய அரசியல் நடவடிக்கையாக தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் திரு. வி. இரையன்பு ஐஏஎஸ் அவர்களை மாற்றியிருப்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.