சென்னையில் விடாமல் பெய்யும் கனமழை.. இன்னும் தொடருமா? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
Chennai Weather Today : சென்னையில் இரவில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. எனவே, சென்னையில் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னையில் மழை
சென்னை, செப்டம்பர் 14 : சென்னையில் இடி, மின்னலுடன் மழை (Chennai Weather Today) பெய்து வருகிறது. மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை 2025 செப்டம்பர் 14ஆம் தேதியான இன்று வரை நீடிக்கும் என வானிலை மையம் கூறியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் கூட நல்ல மழை பெய்து வருகிறது. எழும்பூர், ஆயிரம் விளக்கு, நந்தனம், சைதாப்பேட்டை, வடபழனி, கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் விடாமல் பெய்யும் கனமழை
மேலும், சென்னை புறநகர் பகுதியான பெருங்களத்தூர், தாம்பரம், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழை பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திர – தெற்கு ஒரிச கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது.
Also Read : பிச்சு உதறபோகும் கனமழை.. 2 நாட்களுக்கு அலர்ட்.. சென்னையில் வானிலை எப்படி?
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சத்திஸ்கர் பகுதிகிளல் அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 செப்டம்பர் 14ஆம் தேதியான இன்று முதல் 19ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் கனமழையும், மிதமான மழையும் பெய்யக் கூடும். 2025 செப்டம்பர் 16ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை தொடருமா?
2025 செப்டம்பர் 17ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். 2025 செப்டம்பர் 18ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
Also Read : சென்னையில் இரவு முழுவதும் நீடித்த மழை.. பிற மாவட்டங்களில் எப்படி?
2025 செப்டம்பர் 19ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.