வாகன ஓட்டிகளே அலர்ட்… ஈசிஆர் பக்கம் போறீங்களா? போக்குவரத்து மாற்றம்!
Chennai Traffic Diversion : சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் 2025 செப்டம்பர் 21ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சைக்கோளத்தான் நிகழ்ச்சியை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, செப்டம்பர் 18 : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2025 செப்டம்பர் 21ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. சைக்கோளத்தான் சென்னை என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஈசிஆர் பகுதியில் போக்குவரத்து மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. தற்போது ஆங்காங்கே மெட்ரோ பணிகள், சாலை விரிவாக்கம், மேம்பால அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. இதற்கிடையில், அவ்வப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2025 செப்டபம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணையம் மற்றும எச்சிஎல் பிரைவேட் லிமிடெட் இணைந்து, இந்திய சைக்கிள் சம்மேளனத்தின் தலைமையில் ’சைக்ளோத்தான் சென்னை 2025′ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழில்துறை மற்றும் மிதிவண்டி ஓட்டிகள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் தொடங்கி, மாமல்லபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வரை சென்று, மீண்டும் மாயாஜாலில் போட்டி நிறைவடையும்.
Also Read : தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திருட்டு.. தலைமை அர்ச்சகர் தலைமறைவு!
ஈசிஆர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
🚨Press Note – Tambaram City Police🚨#TrafficDiversion #ECR #TambaramCityPolice pic.twitter.com/VUl2vZG2tT
— TAMBARAM CITY POLICE (@COPTBM) September 17, 2025
இதனையொட்டி, 2025 செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் காலை 8.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், சென்னை நகரிலிருந்து மாமல்லபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அக்கரை சந்திப்பிலிருந்து கே.கே. சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்பு ஓ.எம்.ஆர். மற்றும் படூர் வழியாக மாமல்லபுரம் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
Also Read : மிரண்ட சென்னை ஏர்போர்ட்… ரூ.20 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.. சிக்கிய கென்யா இளைஞர்!
மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பூஞ்சேரி சந்திப்பிலிருந்து எஸ். எஸ். என். ரவுண்டானா கேளம்பாக்கம் சந்திப்பு நாவலூர் சோழிங்கநல்லூர் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாயாஜால் முதல் கோவளம் சந்திப்பு, வரையிலான பக்க சாலை, சைக்கிள் ஓட்டப் பந்தயத்திற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.