வாகன ஒட்டிகளே கவனிங்க.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய ரூட் இதுதான்!

Chennai Traffic Diversion: சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்ட்டை வரையிலான ஜிஎஸ்டி சாலையில் நான்கு வழி மேம்பால சாலை அமைத்தல் தொடர்பான பணிகள் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

வாகன ஒட்டிகளே கவனிங்க.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய ரூட் இதுதான்!

சென்னையில் போக்குவரத்து மாறற்ம்

Updated On: 

19 Apr 2025 07:33 AM

சென்னை, ஏப்ரல் 19: சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் (Chennai Traffic diversion) செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 20ஆம் தேதி (நாளை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும். குறிப்பாக, பீக் ஹவரில் சொல்லவே வேண்டாம். சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து தான் செல்லும்.

வாகன ஒட்டிகளே கவனிங்க

இதற்கிடையில், சாலை விரிவாக்கம், மெட்ரோ பணிகள் என அவ்வப்போது போக்குவரத்து  மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.  மெட்ரோ பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில், தற்போது ஒரு அறிவிப்பை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை  போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  2025 ஏப்ரல் 19ஆம் தேதி 22ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ஜிஎஸ்டி சாலையில் நான்கு வழி மேம்பால சாலை அமைத்தல் தொடர்பான பணிகள் நடைபெற உள்ளது.

இதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள  அறிவிப்பில், தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னர் இடது/வலது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்


சைதாப்பேட்டையில் இருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும், அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் அண்ணா சாலை, செனடாப் சாலை, வழியாகச் சென்று பின்னர் சேமியர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்படும், அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் சாலையில் சென்று டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சீரான போக்குவரத்தினை உறுதி செய்வதற்காக அண்ணாசாலை, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடைசெய்யப்படும் என்று  சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.