Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சொத்து வரி: அதிமுக இரட்டை வேடங்களில் அரசியல் நாடகம்: அமைச்சர் கே.என். நேரு விமர்சனம்

Tamil Nadu Property Tax Hike: தமிழகத்தில் சொத்து வரி உயர்வுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு, 15-வது நிதி ஆணையத்தின் நிபந்தனைகளையும், அதிமுக ஆட்சிக்கால ஒப்பந்தங்களையும் இதற்கான ஒப்பந்தங்களை மத்திய அரசுடன் மேற்கொண்டது அதிமுகதான் என சுட்டிக்காட்டினார்.

சொத்து வரி: அதிமுக இரட்டை வேடங்களில் அரசியல் நாடகம்: அமைச்சர் கே.என். நேரு விமர்சனம்
அமைச்சர் கே.என். நேரு விமர்சனம் Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 24 May 2025 18:28 PM

சென்னை மே 24: தமிழகத்தில் சொத்து வரி உயர்வை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அதிரடியான பேச்சுகளை முன்வைக்க, அதற்குப் பின்னணியில் மத்திய அரசின் கட்டாயப்படுத்தல் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கால உடன்பாடுகளே காரணம் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு (Municipal Administration Minister K.N. Nehru)  விளக்கமளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (AIADMK General Secretary Edappadi Palaniswami) சொத்து வரி உயர்வை ‘பச்சைப் பொய்’ என விமர்சித்ததாகக் கூறி, அவரே மத்திய பாஜகவின் விதிகளை ஏற்று கையெழுத்திட்டதால் இவ்வளவாக நேர்ந்தது என நேரு குற்றம்சாட்டினார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு அமைத்த 15-ஆவது நிதி ஆணையம் சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்தும் நிபந்தனையை விதித்தது. இதனை அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்றுக்கொண்டதே இன்றைய சூழ்நிலைக்கு அடிப்படை காரணம்” என்றார்.

15-ஆவது நிதி ஆணையம் விதித்த நிபந்தனைகள்

15-ஆவது நிதி ஆணையம், மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப நகர்ப்புற சொத்து வரியை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியது. இதனை ஏற்காவிட்டால், 2021-26 காலக்கட்டத்துக்கான ரூ.4.36 லட்சம் கோடி மானியங்கள் நிறுத்தப்படும் என்றும், தூய்மை இந்தியா, அம்ரூட் 2.0 திட்டங்களுக்கு நிதி வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்திலேயே 2018ம் ஆண்டு 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் சொத்து வரி 50% முதல் 100% வரை உயர்த்தப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்களை மத்திய அரசுடன் மேற்கொண்டது அதிமுகதான்.

உள்ளாட்சி அமைப்புகளின் ஊழல் மற்றும் தேர்தல் மறுப்பு

நேரு மேலும் கூறியதாவது, “பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் கைவிடப்பட்டு, பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரத்துடன் முறைகேடுகளை செய்தார். இவருக்கு துணையாக இருந்தது பழனிசாமியின் தலைமையே” என்றார். முக.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அரசு பதவிக்கு வந்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டியது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய வரி உயர்வு – திமுக அரசின் நேர்மையான நடைமுறை

“பணத்திறனும் இல்லை, திட்ட நிதிகளும் கிடைக்கவில்லை என்ற நிலையில், திமுக அரசு வரி உயர்வை மிகக் குறைந்த அளவில் மட்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது. குடியிருப்புகள் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு நான்கு பிரிவுகளாக வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மிகக் குறைவான சொத்து வரி மட்டுமே விதிக்கப்படுகிறது,” என நேரு தெரிவித்தார்.

அதிமுக – இரட்டை வேடங்களில் அரசியல் நாடகம்

நேரு கடைசியில் கூறியதாவது: “அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஏற்றுக்கொண்ட ஒப்பந்தங்களால் இன்று சொத்து வரி கட்டாயமாக உயர்த்தப்பட வேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். இப்போது அதே பழனிசாமி சொத்து வரி உயர்வை எதிர்த்து பொய்கள் பேசுகிறார். ‘அம்பி, ரெமோ’ என்ற இரட்டை வேடங்களில் நடித்த அந்நியன் போலவே, ‘பின்வாங்கிய’ பாசாசமாகவே பழனிசாமி விளங்குகிறார்” என்றார்.

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் - குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது!
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் - குஜராத்தை சேர்ந்த உளவாளி கைது!...
சந்திரமுகியில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும்- ஜோதிகா!
சந்திரமுகியில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும்- ஜோதிகா!...
ராகுல் காந்தி மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்!
ராகுல் காந்தி மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்!...
ஆர்பிஐயின் விதியால் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் - விஜய் கண்டனம்!
ஆர்பிஐயின் விதியால் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் - விஜய் கண்டனம்!...
Thug Life என டைப் செய்தால் கூகுளில் வரும் மேஜிக் - வைரல் வீடியோ
Thug Life என டைப் செய்தால் கூகுளில் வரும் மேஜிக் - வைரல் வீடியோ...
உடல் குளிர்ச்சியைத் தரும் காய்கறிகள்.. நீரிழிப்பை தடுக்கும்!
உடல் குளிர்ச்சியைத் தரும் காய்கறிகள்.. நீரிழிப்பை தடுக்கும்!...
தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!
தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!...
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்...
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!...
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?...
சொத்து வரி: அதிமுக இரட்டை வேடங்களில் அரசியல் நாடகம் - கே.என் நேரு
சொத்து வரி: அதிமுக இரட்டை வேடங்களில் அரசியல் நாடகம் - கே.என் நேரு...