ஊட்டியில் உறைபனி.. 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் உறைபனி தொடங்கியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் தமிழகத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் உறைபனி.. 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட்..

கோப்பு புகைப்படம்

Published: 

12 Dec 2025 06:40 AM

 IST

வானிலை நிலவரம் — டிசம்பர் 12, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, டிசம்பர் 12, 2025 தேதியான இன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதே சமயத்தில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை நேரத்தில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு:

மேலும், டிசம்பர் 13 மற்றும் டிசம்பர் 14 ஆகிய இரண்டு நாட்களில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பதிவாகக்கூடும் என்றும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை டிசம்பர் 17, 2025ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் மழை அளவு முற்றிலுமாக குறைந்து, பனியின் தொடக்கம் படிப்படியாக ஆரம்பமாகியுள்ளது.

மேலும் படிக்க: டெல்டாக்காரன் என சொல்லும் முதல்வர் விவசாயிகளுக்கு விரோதியாக செயல்படுகிறார் – நயினார் நாகேந்திரன்..

ஊட்டி கொடையில் உறைபனி:

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் உறைபனி தொடங்கியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் தமிழகத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: எதிர்க் கட்சிகளின் அரவணைப்பில் தவெக மாவட்ட செயலாளர்கள்?விஜய் வைத்த செக்!

சென்னையில் பனிமூட்டம் இருக்கும்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அதிகாலை வேளையில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படக்கூடும். இதன் காரணமாக, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை விட குறைவாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என தெரிவித்தார்.

நோயால் பாதிக்கப்பட்ட எறும்புகளின் ஆச்சரியமூட்டும் செயல்.. விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு..
ஒரு மணி நேர கணவர் சேவை.... ஆண்கள் பற்றாக்குறையால் தவிக்கும் பெண்கள் - எங்கு தெரியுமா?
19,000 டாலர் மதிப்புள்ள முட்டைகளை முழுங்கிய நபர்.. நியுசிலாந்தில் நடந்த பரபரப்பு சம்பவம்..
நானும் வீட்டுக்கு போகனும்... மன்னிப்புக்கேட்ட இண்டிகோ பைலட்