தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் எப்படி இருக்கும்? வானிலை சொல்வது என்ன?
Tamil Nadu Weather Update: செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 24 வரை வட தமிழகத்தின் சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், செப்டம்பர் 21, 2025: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் நல்ல மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 21, 2025 அன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 24 வரை வட தமிழகத்தின் சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 27, 2025 வரை தமிழகத்தில் லேசான மழை மட்டுமே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பதிவான மழை:
- அதிகபட்சமாக லாத்ல்பேட்டை (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 6 செ.மீ
- மணல்மேடு (மயிலாடுதுறை), சீர்காழி (மயிலாடுதுறை) தலா 5 செ.மீ
- கே.எம்.கோயில் (கடலூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), மயிலாடுதுறை AWS (மயிலாடுதுறை) தலா 4 செ.மீ
- மயிலாடுதுறை (மயிலாடுதுறை), காரையூர் (புதுக்கோட்டை), மேல் கூடலூர் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), காரைக்குடி (சிவகங்கை), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 3 செ.மீ
மேலும் படிக்க: ஒரு மணி நேரம் மீட்டிங்.. எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு.. என்ன மேட்டர்?
சென்னை மற்றும் புறநகர் வானிலை:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 21, 2025
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெப்பநிலையில் பெரிதாக மாற்றம் இல்லை. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கமும் கணிசமாக குறைந்துள்ளது.
மேலும் படிக்க: 1967, 1977, 2026.. கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் – விஜய்..
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூரில் 33.2 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36 டிகிரி செல்சியஸ், தொண்டையில் 32.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 32.1 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 31.3 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் 31 அல்லது 33 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை பதிவானது.