தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. அப்போ பனிமூட்டம் இருக்குமா?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. அப்போ பனிமூட்டம் இருக்குமா?

கோப்பு புகைப்படம்

Published: 

21 Jan 2026 06:15 AM

 IST

வானிலை நிலவரம், ஜனவரி 21, 2026: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், அதாவது ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தனைத் தொடர்ந்து, 23ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலையே தொடரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 24ஆம் தேதி கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

வடகிழக்கு பருவமழை தமிழகத்தை விட்டு விலகியுள்ள சூழலில், தற்போது மாநிலம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலை தொடரும் என்றும், ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், இது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

23ஆம் தேதி முதல் லேசான மழை பெய்யக்கூடிய சூழலில், இரவு நேர வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை பெய்யும் நாட்களில் வெப்பநிலையில் சிறிய மாற்றம் இருக்கும் நிலையில், பின்னர் மீண்டும் இயல்பைப் போலவே இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் தொடரும் பனிமூட்டம்:

24ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும். மேலும், 25 மற்றும் 26ஆம் தேதிகளில் தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், தற்போதைய நிலையே தொடரும் என்றும், அதாவது இயல்பை விட சற்று குறைவாகவே இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 33.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 32.1 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 32.4 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 32 டிகிரி செல்சியஸ், மதுரையில் 32.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 30.4 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 29.6 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.

ஈரானில் அதிரடியாக உயர்ந்த சமையல் எண்ணெய்.. கடும் அவதியில் மக்கள்..
புஷ்பானா ஃபயர்! புஷ்பா 2 புரமோஷனுக்காக ஜப்பானில் அல்லு அர்ஜுன்
உரிமையாளரை காப்பாற்ற புலியுடன் போராடி உயிர் தியாகம் செய்த நாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..
3 நாகப் பாம்புகள் உடன் மருத்துவமனைக்கு வந்த நபர்.. பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்..