இனி வெயில் இல்லை.. அடுத்த 7 நாட்களுக்கு கொட்டித்தீர்க்க போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. இனி வரும் நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பநிலை குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி வெயில் இல்லை.. அடுத்த 7 நாட்களுக்கு கொட்டித்தீர்க்க போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்

கோப்பு புகைப்படம்

Published: 

15 Sep 2025 14:39 PM

 IST

வானிலை நிலவரம், செப்டம்பர் 15, 2025: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேடுநிலைச் சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் 15, 2025 (இன்று) திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16, 2025 (நாளை) ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. இனி வரும் நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை:

செப்டம்பர் 17, 2025 அன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செப்டம்பர் 18, 2025 அன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும்; செப்டம்பர் 19, 2025 அன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறையும் வெப்பநிலை:

தொடர் மழையின் காரணமாக, தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய சில நாட்களில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைந்து பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இரவு அல்லது மாலை நேரங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தினசரி நான் செங்கோட்டையன் இடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் – ஓ. பன்னீர்செல்வம்..

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் 35 டிகிரி செல்சியஸ், நாகையில் 34 டிகிரி செல்சியஸ், கரூரில் 36.5 டிகிரி செல்சியஸ், ஈரோடில் 35.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 30.6 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Follow Us
Related Stories
V. V. Rajan Chellappa Tamil Nadu Election: தேர்தலில் கவனம் பெறும் திருப்பரங்குன்றம் தொகுதி.. மீண்டும் வசமாக்குவாரா வி.வி.ராஜன் செல்லப்பா!
Raja Kannappan Tamil Nadu Election: முதுகுளத்தூர் தொகுதியில் முத்திரை பதிப்பாரா ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்!
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை… தொல்.திருமாவளவன் திடீர் முடிவு.. பின் வாங்க என்ன காரணம்!
Ruby R. Manoharan Tamil Nadu Election: நாங்குநேரி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா ரூபி ஆர்.மனோகரன்!
வேட்பு மனுவில் குளறுபடி… பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்!
தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. வரி வருவாய் எங்கே செல்கிறது.. வெள்ளை அறிக்கை வெளியிட்டு பியூஷ் கோயல் கேள்வி!
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்