மக்களே மழைக்கு தயாரா? 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?
Tamil Nadu Weather Forecast: தமிழகத்தில் அடுத்த வரும் 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று, ஆகஸ்ட் 2, 2025, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஆகஸ்ட் 2, 2025: தமிழகத்தில் ஓரிரு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மற்றும் தஞ்சாவூரில் 11 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், லால்பேட்டை (கடலூர்), செந்துறை (அரியலூர்), SRC குடிதாங்கி (கடலூர்), திருப்புவனஜொம் (சிவகங்கை) தலா 8, RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), கடலூர் (கடலூர்), விழுப்புரம் (விழுப்புரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), பண்ருட்டி (கடலூர்), காரைக்குடி (சிவகங்கை), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), கே.எம்.கோயில் (கடலூர்) தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பல்வேறு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை:
இது ஒரு பக்கம் இருக்க மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 2, 2025 தேதியான இன்று நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
அதேபோல் ஆகஸ்ட் 3, 2025 தேதியான நாளை நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரிய வகை முழு சூரிய கிரகணம் எப்போது? நாசா சொன்ன உண்மை..
ஆகஸ்ட் 4, 2025 அன்று, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் திறப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.