சென்னையில் கொட்டப்போகும் மழை.. கோவை நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்..

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து வந்த நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொட்டப்போகும் மழை.. கோவை நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்..

கோப்பு புகைப்படம்

Published: 

16 Jul 2025 06:07 AM

வானிலை நிலவரம், ஜூலை 16, 2025: சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று முதல் அதாவது ஜூலை 16 2025 முதல் நல்ல மழை இருக்கக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 17 2025 தேதியான நாளை நீலகிரி கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு:

ஜூலை 18 2025 தேவையான நாளை மறுநாள் நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை தேனி தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழியம் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19, 2025 அன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழையும் தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: திருச்சி மக்களுக்கு ஹேப்பி.. நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் பஞ்சப்பூர் பஸ் நிலையம்.. பேருந்துகள் வழித்தட விவரம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை என்பது 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் இனி கனமழை இருக்கும் – பிரதீப் ஜான்:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்த வரும் நிலையில் ஜூலை 16 2025 தேதியான இன்று முதல் சென்னை மற்றும் வட தமிழகத்தில் கனமழை இருக்கக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இரவு முதல் கனமழை தொடங்கும் எனவும் குறிப்பாக இந்த மழை என்பது குறுகிய மழையாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 100 அல்லது 200 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகக் கூடும் எனவும் இது போன்ற மழை ஜூலை மாதத்தில் மிகவும் அரிதான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read: குற்றால சாரல் திருவிழா தேதி மாற்றம்.. தென்காசி கலெக்டர் முக்கிய அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

இது தொடர்பான அவரது எக்ஸ் வலைதள பகுதியில், தெற்கு ஆந்திரா பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் ஆனால் இதன் மூலம் நேரடியாக சென்னைக்கு மழை இருக்காது எனவும் இருப்பினும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.