Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?

Rain Alert: தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 11 Jun 2025 13:56 PM

வானிலை நிலவரம், 11 ஜூன் 2025: வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அருகில் இருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஏழு தினங்களுக்கு மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியிருக்கும் நிலையில் தமிழகத்தில் அனேக மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஆவடி திருவள்ளூரில் ஒன்பது சென்டிமீட்டர் மழையும், கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 8 சென்டிமீட்டர் மழையும், பெலந்துறை கடலூர் மாவட்டத்தில் 7 சென்டிமீட்டர் மலையும் பதிவாகியுள்ளது.

இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:


ஜூன் 11 2025 ஆன இன்று தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூன் 12ஆம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில். இந்தப் பகுதிகளில் ஜூன் 17ஆம் தேதி வரை மழை தொடரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 11 2025 ஆன இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழக கடலோரப் பகுதிகளில் ஜூன் 11 2025 மற்றும் ஜூன் 12 2025 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸும் , பாளையங்கோட்டையில் 38 டிகிரி செல்சியஸும் , திருச்சிராப்பள்ளியில் 38.7 டிகிரி செல்சியஸும், தூத்துக்குடியில் 39 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்த வரையில் நுங்கம்பாக்கத்தில் 37.5 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது

மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்...
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா...
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...