தென்தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ!!
Weather update: தொடர்ந்து, 28-01-2026 முதல் 30-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர், 31-01-2026 மற்றும் 01-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

கோப்புப் படம்
சென்னை, ஜனவரி 27: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ( ஜனவரி 27) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அதோடு, வரும் நாட்களில் தமிழகத்தில் மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: மதுரை-திருநெல்வேலி வழியாக ஜன.28- இல் அம்ரித் பாரத் ரயில் சேவை…தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இன்று மழை நிலவரம்:
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இன்று (ஜனவரி 27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறியுள்ளது.
தொடர்ந்து, 28-01-2026 முதல் 30-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர், 31-01-2026 மற்றும் 01-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. அதன்படி, பிப்.1ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மழை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று, லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், அவ்வப்போது தூறல் மழை ஏற்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 28-29″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் இன்று (ஜனவரி 27) குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும். 28-01-2026 முதல் 30-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கரூர் சம்பவத்துக்கு நீங்களும் காரணம்… முதல்வரின் வீட்டில் கைகட்டி நின்றீர்கள்.. விஜய் மீது அதிமுக கடும் குற்றச்சாட்டு
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென் தமிழ்நாடு கடற்கரை பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.