கோவையில் பரபரப்பு.. நடுரோட்டில் அடுத்தடுத்து பெண்களிடம் செயின் பறிப்பு!

Coimbatore Crime News : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இரண்டு பெண்களின் மர்ம நபர்கள் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். தங்க நகை என நினைத்து மர்ம நபர்கள் கவரிங் நகை சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் பறித்துள்ளனர். இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.

கோவையில் பரபரப்பு.. நடுரோட்டில் அடுத்தடுத்து பெண்களிடம் செயின் பறிப்பு!

பெண்களிடம் செயின் பறிப்பு

Updated On: 

12 Oct 2025 11:01 AM

 IST

கோவை, அக்டோபர் 12 : கோவை மாவட்டத்தில் நடந்த நகை பறிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், நகை பறிப்பு சம்பவங்களுக்கு அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக முதியவர்கள், பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது.  நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க  காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இருப்பினும், நகை பறிப்பு சம்பவங்கள்  தொடர்ந்து நடந்து வருகிறது.  நகை பறிப்பு சம்பவங்களால்  உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, முதியவர்களின் நகை பறித்துவிட்டு, திருட்டு கும்பல் அவர்களை கொலை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட சென்னை பெருக்குடி ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு சம்பவம் அரரங்கேறின.   2025 ஜூலை 29ஆம் தேதி பெருங்குடி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணிடம் அங்கிருந்த மர்ம நபர் பேச்சுவார்த்தை கொடுத்து, செயின் பறித்துவிட்டு சென்றுள்ளார்.  சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போலீசார்  அந்த நபரை கைது செய்தனர்.  இந்த நிலையில், தற்போது கோவை மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  கோவை மாவட்டம் கொள்ளாச்சி அருகே பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றுக் கொண்டிருந்தனர்.

Also Read : அதிகாலையில் நடந்த கொடூரம் – ஒன்றன்பின் ஒன்றாக மோதிய வாகனங்கள்… சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி

நடுரோட்டில் அடுத்தடுத்து பெண்களிடம் செயின் பறிப்பு

அப்போது, அவ்வழியாக சென்ற பெண் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் சென்றபடியே செயினை பறித்தனர். அந்த பெண் குளத்துப்புதூ பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (30) என தெரியவந்தது. இவர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து மின்னல் வேகத்தில் சென்றனர். அதைத் தொடர்ந்து, குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் நகை பறிப்பில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர்.

முத்துலட்சுமி போன் பேசிக் கொண்டே காலை 11.00 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அப்பேது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் முத்துலட்சுமி கழுத்தில் இருந்த நகையை பறித்துள்ளனர். இதனை அடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஆனால், தங்க நகைகள் என நினைத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கவரிங் நகையை பறித்தது தெரியவந்தது.

Also Read : காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி.. பறிபோன உயிர்.. தூத்துக்குடியில் சம்பவம்

பட்டப்பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்களை பிடிக்க 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானதுபெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கேராளவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.